TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

August 8 , 2018 2304 days 797 0
  • உயிர்க் காப்பீடு அல்லாத பொதுத்துறை நிறுவனமான யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி கோபக் குமாரை அந்நிறுவனத்தின் இயக்குநர் மற்றும் பொது மேலாளராக நியமித்துள்ளது. இவரது நியமனம் உடனடியாக நடைமுறைக்கு வருகிறது என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
    • இதற்கு முன் கோபக் குமார் ஜிஐசி ஹவுசிங் (GIC Hosuing) நிதி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றினார்.
  • இந்தியாவின் மத்திய வங்கியின் தகவலின்படி ஜூன் மாதத்தில் கைபேசி பணப்பையின் மூலம் மேற்கொண்ட பணப்பரிமாற்றத்தின் மதிப்பானது ரூ.14,632 கோடி என்ற மைல்கல்லை எட்டியுள்ளது. அம்மதிப்பு மே மாத பரிமாற்றத்துடன் ஒப்பிடும் போது 42 சதவீதம் அதிகரித்துள்ளது.
    • மே மாதத்தில் பரிமாற்றத்தின் எண்ணிக்கையானது எப்போதும் இல்லாத அளவுக்கு41 மில்லியன் என்ற நிலையை எட்டியது. ஆனால் ஜூன் மாதத்தில் 309.62 மில்லியன் என்ற அளவிற்கு அதாவது 5 சதவீதமாகக் குறைந்துள்ளது.
  • உடனடியாக செயலி அடிப்படையின் மூலம் தனிக்கடன் வழங்குவதற்காக, (லேசிபேயின் (lazypay) மூலமாக) இந்தியாவில் முன்னிலை வகிக்கும் வங்கியில்லாத நிதி நிறுவனமான ரிலையன்ஸ் மணி (Reliance Money) என்ற நிறுவனத்துடன் பேயு (Pay U) என்ற நிறுவனம் உத்திமுறையிலான ஒப்பந்தம் செய்துள்ளது.
  • ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்காக இந்தியாவின் தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையமானது My Call மற்றும் DND 2.0 என்ற செயலிகளை UMANG (United Mobile application for New-age Goverance) தளத்துடன் ஒருங்கிணைத்துள்ளது.
  • கவிஞர் மகுதீஸ்வரன், சிற்பி பவுண்டேசனின் ‘இலக்கிய சிற்பி’ விருதினை பெற்றுள்ளார்.
  • மத்திய அரசின் சார்பில் இந்திய அரசு தலைமை வழக்குரைஞர் K.வேணுகோபால் தலைமை நீதிபதியால் விசாரணை செய்யப்படும் அரசியலமைப்பு சார்ந்த வழக்கு விசாரணைகளின் காணொளி காட்சியினை ஒன்றிலிருந்து மூன்று மாதங்கள் வரையிலான சோதனை கால அடிப்படையில் பதிவு செய்யலாம் மற்றும் நேரலையாக ஒளிபரப்பலாம் என்று உச்சநீதிமன்றத்திடம் கூறியுள்ளார்.
  • இலங்கையைச் சேர்ந்த மட்டைப்பந்தாளர் தனுஷ்கா குணதிலகா ‘நடத்தை விதித் தொகுப்பினை‘ மீறியதை அடுத்து எல்லா விதமான சர்வதேச மட்டைப்பந்து விளையாட்டுகளிலிருந்தும் இலங்கை கிரிக்கெட்டினால் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
    • இது கொழும்புவில் இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையிலான 2வது மற்றும் கடைசி சோதனையாட்டத்தில் 3வது நாள் ஆட்டத்தின் இறுதியில் நடைபெற்றது.
  • ஜெர்மனியை சேர்ந்த நடுகள வீரர் மெசட ஓசில், இனவாதத்தினை மேற்கோளிட்டு காட்டி ஜெர்மனியின் தேசிய கால்பந்து அணியினை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார். மெசட் ஒசில் ஜெர்மனியில் பிறந்து ஜெர்மனிக்காக கால்பந்து விளையாடினாலும் அவரின் மூதாதையர்கள் துருக்கியை சேர்ந்தவர்கள் என்பதால் துருக்கியிடம் இரட்டை குடியுரிமையைப் பெற்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்