TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

January 2 , 2024 199 days 288 0
  • புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தச்சங்குறிச்சி கிராமத்தில் 2024 ஆம் ஆண்டு ஜனவரி 06 ஆம் தேதியன்று தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது.
  • தமிழக தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை அதிகாரியான பிரியா ரவிச் சந்திரன், இந்திய ஆட்சிப் பணியில் சேர்க்கப்படும் முதல் அதிகாரியாக மாறியுள்ளார்.
    • தமிழ்நாட்டில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் சேர்க்கப் பட்ட முதல் பெண் அதிகாரி இவரே ஆவார் என்பதோடு தமிழக தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் இருந்து இந்திய ஆட்சிப் பணியில் சேர்க்கப்படும் முதல் பெண் அதிகாரியும் இவரே ஆவார்.
  • துணை இராணுவப் படைகள் ஆனது, ஜனவரி மாதத்தின் முதல் வாரத்தில் இருந்து தனது அனைத்து அதிகாரப்பூர்வத் தகவல் தொடர்பு மற்றும் ஆவணங்களைப் பகிர்வு ஆகியவற்றிற்காக முற்றிலும் ‘சந்தேஸ் செயலிக்கு’ மாற உள்ளது.
  • சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சகமானது, ‘மெட்டெக் மித்ரா (மருத்துவத் தொழில்நுட்ப மித்ரா) என்ற செயலியினைத் தொடங்கியுள்ளது.
    • இது மருத்துவத் தொழில்நுட்பக் கண்டுபிடிப்பாளர்களுக்கு அதிகாரமளித்து சுகாதார நலத் தீர்வுகளை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • ஜாம்நகரில் உள்ள உலகின் மிகப்பெரிய அடிப்படை நிலை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மற்றும் குஜராத் மாநிலத்தின் பருச் மாவட்டத்தில் உள்ள தஹேஜ் எனுமிடத்தில் உள்ள OPaL பெட்ரோலிய வேதியியல் வளாகம் ஆகியவை தற்போது இந்தியாவின் ‘பெட்ரோலியத் தலைநகராக’ அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
  • அயோத்தியில் அமைக்கப்பட்டுள்ள மிகவும் புதிய விமான நிலையத்திற்கு முனிவரும் கவிஞருமான வால்மீகியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
    • முன்னதாக மரியாதை புருஷோத்தம் ஸ்ரீ ராம் சர்வதேச விமான நிலையம் என பெயர் சூட்ட முடிவு செய்யப்பட்டிருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்