TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

January 3 , 2024 198 days 241 0
  • நிதி ஆயோக் அமைப்பின் முன்னாள் துணைத் தலைவர் அரவிந்த் பனகாரியா 16வது நிதி ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • உத்தரப் பிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தில் உள்ள விருந்தாவனம் எனுமிடத்தில் நாட்டின் முதல் அனைத்துப் பெண்கள் சைனிக் பள்ளி தொடங்கப்பட்டுள்ளது.
  • உஸ்பெகிஸ்தானின் சமர்கண்ட் நகரில் நடைபெற்ற 2023 ஆம் ஆண்டு உலக சதுரங்க விரைவுச் சுற்று சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் கோனேரு ஹம்பி, மகளிருக்கான தனிநபர் பிரிவில் வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.
  • ஜியோ நிறுவனமானது, மும்பையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்துடன் இணைந்து பாரத் GPT என்ற செயற்கை நுண்ணறிவு திட்டத்தில் செயலாற்றி வருகிறது.
  • உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட எட்டு முன்னாள் இந்தியக் கடற்படை அதிகாரிகளுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை கத்தாரில் உள்ள மேல் முறையீட்டு (உச்ச) நீதிமன்றம் மாற்றியமைத்துள்ளது.
  • அரசின் நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வைப் பரப்பும் சாகர் பரிக்ரமா என்ற 10வது கடலோர யாத்திரை சென்னை துறைமுகத்தில் இருந்து தொடங்கியது.
    • இந்த யாத்திரையானது ஆந்திரப் பிரதேசம் மற்றும் புதுச்சேரி முழுவதும் உள்ள கிராமங்களில் மேற்கொள்ளப்பட உள்ளது.
  • 12வது ‘திவ்ய கலா மேளா’ நிகழ்வானது குஜராத் மாநிலத்தின் சூரத் நகரில் நடைபெற்றது.
    • மாற்றுத் திறனாளி நபர்களின் (PwD)/திவ்யாங்ஜன்களின் மிகவும் பொருளாதார வலுவூட்டலுக்கு பங்களிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • கத்தோலிக்கத் திருச்சபையானது 1968 ஆம் ஆண்டு முதல் தேவனின் தாய் அன்னை மரியாவின் பவித்திரத் திருநாளான ஜனவரி 01 ஆம் தேதியினை உலக அமைதி தினமாக அனுசரிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்