2024 ஆம் ஆண்டு உலகளாவிய முதலீட்டாளர்கள் சந்திப்பு நிகழ்வில், ஆக்கப்பூர்வமான பொருளாதாரப் பிரிவில், தனது கிராமப்புறத் திறமைகளை வெளிப்படுத்துவதற்காக, தமிழ்நாடு கிராமப்புற சமையல் யூடியூப் பக்கக் குழுவினைச் சேர்த்திருந்தது.
அடிடாஸ் நிறுவனம் ஆனது, ஆசியாவில் சீன நாட்டிற்கு வெளியே தனது முதல் மற்றும் ஒரே உலகளாவிய சேவை மையத்தை (GCC) சென்னையில் அமைக்க உள்ளது.
விமானப் போக்குவரத்து நிறுவனமான போயிங் நிறுவனம், சென்னையில் உள்ள அதன் உலகளாவியப் பொறியியல் சேவை வழங்கீட்டு மையத்தில் 300 கோடி ரூபாய் முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
வட இந்தியாவின் முதல் தொழில்துறை உயிரி தொழில்நுட்ப பூங்காவானது ஜம்முவில் உள்ள கதுவா எனுமிடத்தில் திறக்கப்பட்டுள்ளது.
மனம் மற்றும் உடல் ஆகியவை இடையே உள்ள தொடர்பைப் பற்றி மக்களுக்குத் தெரியப்படுத்துதல், மக்கள் மத்தியில் சுய-கவனிப்பு, மனம் தெளிந்த நிலை மற்றும் ஆரோக்கியமான நடைமுறைகளை ஊக்குவிப்பதற்காக ஜனவரி 03 ஆம் தேதியன்று சர்வதேச மனம்-உடல் ஆரோக்கிய தினம் அனுசரிக்கப் படுகிறது.