TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

January 8 , 2024 193 days 289 0
  • 2024 ஆம் ஆண்டு உலகளாவிய முதலீட்டாளர்கள் சந்திப்பு நிகழ்வில், ஆக்கப்பூர்வமான பொருளாதாரப் பிரிவில், தனது கிராமப்புறத் திறமைகளை வெளிப்படுத்துவதற்காக, தமிழ்நாடு கிராமப்புற சமையல் யூடியூப் பக்கக் குழுவினைச் சேர்த்திருந்தது.
  • அடிடாஸ் நிறுவனம் ஆனது, ஆசியாவில் சீன நாட்டிற்கு வெளியே தனது முதல் மற்றும் ஒரே உலகளாவிய சேவை மையத்தை (GCC) சென்னையில் அமைக்க உள்ளது.
  • விமானப் போக்குவரத்து நிறுவனமான போயிங் நிறுவனம், சென்னையில் உள்ள அதன் உலகளாவியப் பொறியியல் சேவை வழங்கீட்டு மையத்தில் 300 கோடி ரூபாய் முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
  • வட இந்தியாவின் முதல் தொழில்துறை உயிரி தொழில்நுட்ப பூங்காவானது ஜம்முவில் உள்ள கதுவா எனுமிடத்தில் திறக்கப்பட்டுள்ளது.
  • மனம் மற்றும் உடல் ஆகியவை இடையே உள்ள தொடர்பைப் பற்றி மக்களுக்குத் தெரியப்படுத்துதல், மக்கள் மத்தியில் சுய-கவனிப்பு, மனம் தெளிந்த நிலை மற்றும் ஆரோக்கியமான நடைமுறைகளை ஊக்குவிப்பதற்காக ஜனவரி 03 ஆம் தேதியன்று சர்வதேச மனம்-உடல் ஆரோக்கிய தினம் அனுசரிக்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்