TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

January 15 , 2024 314 days 257 0
  • சென்னையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனமானது, இலங்கையின் கண்டியில் ஒரு புதிய வளாகத்தைத் திறக்க உள்ளது.
  • கோவாவில் உள்ள தேசிய துருவ மற்றும் பெருங்கடல் ஆராய்ச்சி மையத்தின் தலைமையில் மேற்கொள்ளப்படும் இந்தியாவின் 43வது அண்டார்டிக் ஆய்வுப் பயணத்தில் மொரிஷியஸைச் சேர்ந்த இரண்டு அறிவியலாளர்களும், வங்காள தேசத்தினைச் சேர்ந்த ஒருவரும் இணைந்துள்ளனர்.
  • இந்தியா, ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் கடற்படைகள் சீ டிராகன்-24 என்ற பன்னாட்டுக் கடல்சார் பயிற்சியில் பங்கேற்கின்றன.
  • அமெரிக்காவில் ஜனவரி 11 ஆம் தேதியன்று தேசிய மனிதக் கடத்தல் விழிப்புணர்வு தினமாக அனுசரிக்கப்படுகிறது.
  • பிளாக்ஃபீட் மற்றும் நெஸ் பெர்ஸ் எனப்படும் பழங்குடியினத்தினைச் சேர்ந்த லில்லி கிளாட்ஸ்டோன், கில்லர்ஸ் ஆஃப் தி ஃப்ளவர் மூன் திரைப்படத்திற்காக சிறந்த நடிகை பிரிவில் கோல்டன் குளோப் விருதை வென்ற முதல் பழங்குடியினர் என்ற மிகப் பெரும் பெருமையினைப் பெற்றுள்ளார்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்