TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

August 9 , 2018 2171 days 686 0
  • 1962-ஆம் ஆண்டு, சுங்கத்துறை சட்டத்தின் பிரிவு 159-ன் கீழ் அரசாங்கம் 328 ஜவுளித் துறைக்கான பொருட்களின் மீது நடப்பில் இருக்கும் 10 சதவிகித வரியை 20 சதவிகிதம் என்ற அளவிற்கு உயர்த்தியுள்ளது.
  • 2018-ஆம் ஆண்டு, ஆகஸ்டு 17-ஆம் தேதி கோவளம் கடற்கரையில் Covelong Point Surf Festival என்ற திருவிழாவின் 6-வது பதிப்பினை சென்னை நடத்த இருக்கின்றது.
  • முதல் முறையாக ஆசியாவில் 2019-ஆம் ஆண்டு ரக்பி உலகக் கோப்பையை ஜப்பான் நடத்த இருக்கின்றது. இது ரக்பி உலகக் கோப்பையின் 9-வது பதிப்பாகும்.
  • வெனிசுலாவின் குடியரசுத் தலைவரான நிக்கோலஸ் மதுரோ ராணுவ நிகழ்ச்சியில் பங்கேற்கும் போது வெடிகுண்டுகள் வைத்து படுகொலை செய்யப்படும் முயற்சியில் இருந்து தப்பித்து இருக்கின்றார். இவர் 2013-ஆம் ஆண்டு பொதுவுடைமைவாதியான ஹியூகோ சாவோஸிற்குப் பதிலாகப் பதவியேற்றார்.
  • தனது உள்நாட்டு விவகாரத்தில் தலையிட்டமைக்காக சவுதி அரேபியா கனடாவுடனான தனது அனைத்து ராஜ்ஜிய, வர்த்தக மற்றும் முதலீட்டுத் தொடர்புகளைத் துண்டிப்பதாக அறிவித்துள்ளது.
    • மேலும் தனது தூதரை திரும்பப் பெற்றும், கனடா நாட்டுத் தூதரை வெளியேற்றியும் இருக்கின்றது.
  • எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையின் 175வது வருட சேவைக்கான கொண்டாட்ட விழாவின் போது, தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் மருத்துவமனை வளாகத்திற்குள்ளேயே புதிதாக பிறந்த குழந்தைகள் திருடப்படுவது (அ) காணாமல் போவதை தடுப்பதற்காக ரேடியோ அதிர்வெண் அடையாள குறியீட்டு சேவையினை (RFIT Service - Radio Frequency Identification Tag) தொடங்கி வைத்தார்.
  • மும்பையின் செயின்ட் சேவியர்ஸ் கல்லூரி அதன் முதல் கிருத்துவரல்லாத கல்லூரி முதல்வரை பெற உள்ளது. இது இக்கல்லூரியின் 150 வருட வரலாற்றில் முதல்முறையாகும். ராஜேந்திர சிந்தே இக்கல்லூரியின் 150 வருடத்தை கடந்த தினமான செப்டம்பர் 1 அன்று பொறுப்பினை ஏற்றுக் கொள்வார்.
    • கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்ட கல்லூரியின் தற்போதைய தாவரவியல் துறை தலைவர், இயேசு சபையை சாராத முதல் கல்லூரி முதல்வர் டாக்டர்.பாப்பிஸ்ட் அக்னெல் மெனீசில்ஸை அடுத்து பதவி ஏற்க உள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்