TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

January 23 , 2024 178 days 180 0
  • இந்திய இராணுவத்தின் முதல் தலைமைப் படைத் தளபதியான பீல்ட் மார்ஷல் K.M. கரியப்பா அவர்கள் 1953 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றதை நினைவு கூரும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 14 ஆம் தேதியன்று ஆயுதப் படை வீரர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது.
  • தூர்தர்ஷன் ஒளியலை வரிசையின் புதுப்பிக்கப்பட்ட தமிழ் மொழி சார் ஒளியலை வரிசை சமீபத்தில் தொடங்கப்பட்டது.
    • முன்பு DD பொதிகை என்று அழைக்கப்பட்ட இந்த ஒளியலை வரிசைக்கு DD தமிழ் என மறுபெயரிடப்பட்டுள்ளது.
  • தமிழ் எழுத்தாளர் சாரு நிவேதிதா எழுதிய ஔரங்கசீப்புடனான உரையாடல்கள் என்ற புத்தகம் ஆனது, நந்தினி கிருஷ்ணனால் ஆங்கில மொழியில் மொழி பெயர்க்கப் பட்டு உள்ளது.
  • அமைதிக்கான ஆசிய பௌத்த மாநாட்டின் (ABCP) 12வது பொதுச் சபையானது புது டெல்லியில் நடைபெற்றது.
  • லீக் போட்டிகள் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக விளம்பர ஆதரவு தொகையுடன் அடுத்த 5 ஆண்டுகளுக்கு IPL போட்டிகளின் விளம்பர ஆதரவு உரிமையை டாடா குழுமம் பெற்றுள்ளது.
    • TATA குழுமம் இதற்கு முன்னர் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் IPL போட்டிக்கான விளம்பர ஆதரவு உரிமைகளை பெற்றிருந்ததோடு, அது மகளிர் பிரீமியர் லீக் போட்டியின் விளம்பர ஆதரவு உரிமையையும் கொண்டிருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்