ஆர்மடோ எனப்படுகின்ற இந்தியாவின் முதல் கவசமிடப்பட்ட மிதரக சிறப்புப் பயன்பாட்டு வாகனம் (ALSV) ஆனது 2024 ஆம் ஆண்டு குடியரசு தின அணிவகுப்பில் அறிமுகப் படுத்தப்பட்டது.
இது இந்திய ஆயுதப் படைகளுக்காக மஹிந்திரா பாதுகாப்பு அமைப்புகள் நிறுவனத்தினால், முழுவதும் உள்நாட்டிலேயே வடிவமைத்துக் கட்டமைக்கப்பட்ட வாகனமாகும்.
சந்தை மூலதனத்தின் அடிப்படையில் உலகளாவியப் பங்குச் சந்தைத் தரவரிசையில் ஹாங்காங்கை முந்தி இந்தியா நான்காவது இடத்தைப் பெற்றுள்ளது.
ஹாங்காங்கின் 4.29 டிரில்லியன் டாலர் மதிப்பிலான சந்தை மூலதனத்தை விஞ்சி, இந்தியாவின் சந்தை மூலதன மதிப்பு 4.33 டிரில்லியன் டாலரை எட்டியுள்ளது.
மீன்வள மேலாண்மை மீதான உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் FAO COFI (மீன்வளம் குறித்த குழு) துணைக் குழுவின் முதல் துணைத் தலைமைப் பொறுப்பிற்கு இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
57 ஆண்டுகளில் முதன்முறையாக 'மீன் பிடிப்பு' குறித்த உணவு மற்றும் வேளாண் அமைப்பின் மீன்வள வாரியத்தின் உறுப்பினராக இந்தியா பணியாற்ற உள்ளது.
இயங்கலை தனியுரிமை, தரவுப் பாதுகாப்பு மற்றும் எண்ணிம உலகில் நமது தனிப் பட்டத் தகவல்களை எவ்வாறு பாதுகாப்பது என்பது பற்றிய முக்கிய விழிப்புணர்வை ஏற்படுத்தவதற்காக ஜனவரி 28 ஆம் தேதியன்று தரவு தனியுரிமை தினம் அனுசரிக்கப் படுகிறது.