TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

August 11 , 2018 2170 days 733 0
  • பிரபல பால் மற்றும் பால் பொருட்களுக்கான அமுல் பிராண்டின் விளம்பரதாரர்களான குஜராத் கூட்டுறவு பால் கூட்டமைப்பு நிறுவனத்திற்கு இந்திய சர்வதேச விளம்பர சங்கம் (International Advertising Association India – IAAI) ‘வருடத்தின் விளம்பரதாரர்’ விருதினை வழங்கியுள்ளது.
  • ஜனவரி 29, 2020-ல் அன்று முடிவடையும் தனியுரிமை மற்றும் குடியுரிமைகள் மேற்பார்வை குழு உறுப்பினர் என்ற பதவியின் கால வரையரையான 6 வருட காலத்தின் மீதமுள்ள காலத்திற்கு புகழ்பெற்ற இந்திய அமெரிக்க சட்ட பேராசிரியர் மற்றும் சட்ட நிபுணர் ஆதித்யா பம்சாயை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பரிந்துரைத்துள்ளார்.
    • இது ஒரு நாட்டில் தனியுரிமை மற்றும் குடியுரிமைகள் ஆகியவற்றை காப்பதற்காக சுதந்திரமாக செயல்படும் நிறுவனம் ஆகும்.
  • நாட்டில் தொழில் முனைவோரின் புனிதத்தினை மேம்படுத்துவதற்கான அரசின் திட்டத்தினை நிறைவு செய்வதற்காக ஸ்டார்ட்-அப் இந்தியா நிறுவனம், ஸ்டார்ட் அப் அகேடமியா கூட்டணி என்ற திட்டத்தினை தொடங்கியுள்ளது. இது ஒரே மாதிரியான களங்களில் பணிபுரியும் கல்வி அறிஞர்கள் மற்றும் தொடக்க நிறுவனங்களுக்கு இடையே வழிகாட்டுதலுக்கான வாய்ப்புகளை வளர்ப்பதற்கான தனிப்பட்ட திட்டமாகும்.
  • 51-வது ASEAN வெளிநாட்டு அமைச்சர்கள் சந்திப்பு சிங்கப்பூரில் நடைபெற்றது. இது சிங்கப்பூரின் வெளிநாட்டு அமைச்சர் லீ ஹிசெய்ன் லூங்க்-ஆல் தலைமை தாங்கப்பட்டது. தென்கிழக்கு ஆசியாவின் அமித்தி ஒப்பந்தம் மற்றும் கூட்டுறவில் ஈரான் அதிகாரப்பூர்வமாக இணைந்தது.
  • தேசிய மனித உரிமை ஆணையத்தின் குறும்பட விருது திட்டம் 2018-ன் கீழ் சிம்லாவைச் சேர்ந்த திரைப்படத் தயாரிப்பாளர் தேவ்கன்யா லோத்தெத்தாவின் திரைப்படம் “Behind The Bars” முதல் பரிசினை வென்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்