2021-22 ஆம் ஆண்டு AISHE கணக்கெடுப்பின்படி, உத்தரப் பிரதேச மாநிலம் ஆனது, நாட்டிலேயே அதிக எண்ணிக்கையிலான (8375) கல்லூரிகளைக் கொண்டுள்ள நிலையில், அதைத் தொடர்ந்து மகாராஷ்டிரா (4692) கர்நாடகா (4430), ராஜஸ்தான் (3934), மற்றும் தமிழ்நாடு (2829) ஆகியவை இடம் பெற்றுள்ளன.
நாட்டிலேயே அதிக கல்லூரிகளைக் கொண்டதாக பெங்களுரு நகர மாவட்டம் (1106) உள்ளதோடு, நாட்டில் ஒரு லட்சம் மக்கள்தொகைக்கு அதிக கல்லூரிகள் என்ற எண்ணிக்கையில் கர்நாடக மாநிலமும் (66) அதனைத் தொடர்ந்து தெலங்கானா (52), ஆந்திரப் பிரதேசம் (49), இமாச்சலப் பிரதேசம் (47), புதுச்சேரி (53) மற்றும் கேரளா (46) ஆகியனவும் உள்ளன.
3வது வீர் கதா திட்டத்தில் 36 மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் இருந்து 1.36 கோடிக்கும் அதிகமான பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.
ஆயுதப்படைகளின் அதிகாரிகள்/படைப்பிரிவினரின் வீரம் மற்றும் தியாகத்தைப் போற்றும் வகையில் மாணவர்கள் கவிதைகள், ஓவியங்கள், கட்டுரைகள், ஒளிப் படங்கள் போன்றவற்றை அனுப்பினர்.
ஓலா நிறுவனத்தின் க்ருத்ரிம் எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப புத்தொழில் நிறுவனமானது, 50 மில்லியன் டாலர் நிதியினைப் பெற்று இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப யூனிகார்ன் நிறுவனமாக உருவெடுத்து உள்ளது.
சமீபத்தில் ATP ஆடவர் இரட்டையர் போட்டிக்கான தரவரிசையில் உலகளவில் முதலிடத்தினைப் பெற்ற, 43 வயதான ரோஹன் போபண்ணா, தற்போது கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற மிக வயதான நபர் என்ற பெருமையினைப் பெற்றுள்ளார்.
ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 31 ஆம் தேதியன்று சர்வதேச வரிக்குதிரை தினம் அனுசரிக்கப் படுகிறது.