தமிழக அரசானது, 12,000 கிராமப் பஞ்சாயத்துஅமைப்புகளில் உள்ள மாணவர்களுக்கு இலவச விளையாட்டு உபகரணங்கள் தொகுப்பினை வழங்கும் கலைஞர் விளையாட்டு உபகரணத் தொகுப்பு வழங்கீட்டுத் திட்டத்தினை அறிவித்துள்ளது.
இந்தியக் குடியரசுத் தலைவர் அவர்கள், இந்தியாவின் முன்னணிக் கல்வியாளரான சத்னாம் சிங் சந்துவை மாநிலங்களவைக்கு நியமித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டு கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டுப் போட்டிகளுக்கான உருவச் சின்னம் மற்றும் முத்திரையானது (லடாக்கிலும் காஷ்மீரின் குல்மார்க்கிலும் நடைபெற உள்ளது) சமீபத்தில் வெளியிடப்பட்டது.
‘ஷீன்-இ ஷீ’ அல்லது ஷான் என்றழைக்கப்படும் பனிச்சிறுத்தையானது இந்தப் போட்டியின் அதிகாரப்பூர்வச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்காட்லாந்தைச் சேர்ந்த கார்ட்டர் டல்லாஸ் என்ற இரண்டு வயது சிறுவன், தனது தந்தையின் முதுகில் அவரோடு பயணித்தப் படி எவரெஸ்ட் சிகரத்தின் அடிவார முகாமைச் சென்றடைந்த இளம் நபர் என்ற சாதனையினைப் படைத்துள்ளார்.