மத்தியப் பொதுத்துறை நிறுவனமான REC லிமிடெட், ‘நிலையான நிதி முறைக்கான அசெட் டிரிபிள் A விருதுகளில்’ 2024 ஆம் ஆண்டின் சிறந்தப் பசுமைப் பத்திரம்-பெரு நிறுவனங்கள் விருதைப் பெற்றுள்ளது.
இந்தியா சமீபத்தில் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட அபியாஸ் எனப்படும் அதிவேக நீட்டிக்கப்படக் கூடிய வான்வழி இலக்கு அழிப்பு ஏவுகணையினை வெற்றிகரமாகப் பரிசோதனை செய்தது.
இந்திய வானியல் கழகத்தின் 42வது கூட்டம் பெங்களூரில் நடைபெற்றது.
இந்தியா மற்றும் குவைத் அணி இடையிலான 2026 ஆம் ஆண்டு FIFA உலகக் கோப்பை போட்டியின் தகுதிச் சுற்றுப் போட்டியை நடத்துவதற்கான இடமாக ஹைதராபாத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
பாதுகாப்பான இணைய தினம் ஆனது ஆண்டுதோறும் பிப்ரவரி 08 ஆம் தேதியன்று அனுசரிக்கப்படுகிறது.
2024 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, ‘’Inspiring Change. Making a difference, managing influence and navigating change online’’ என்பதாகும்.