TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

February 11 , 2024 159 days 210 0
  • மத்தியப் பொதுத்துறை நிறுவனமான REC லிமிடெட், ‘நிலையான நிதி முறைக்கான அசெட் டிரிபிள் A விருதுகளில்’ 2024 ஆம் ஆண்டின் சிறந்தப் பசுமைப் பத்திரம்-பெரு நிறுவனங்கள் விருதைப் பெற்றுள்ளது.
  • இந்தியா சமீபத்தில் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட அபியாஸ் எனப்படும் அதிவேக நீட்டிக்கப்படக் கூடிய வான்வழி இலக்கு அழிப்பு ஏவுகணையினை வெற்றிகரமாகப் பரிசோதனை செய்தது.
  • இந்திய வானியல் கழகத்தின் 42வது கூட்டம் பெங்களூரில் நடைபெற்றது.
  • இந்தியா மற்றும் குவைத் அணி இடையிலான 2026 ஆம் ஆண்டு FIFA உலகக் கோப்பை போட்டியின் தகுதிச் சுற்றுப் போட்டியை நடத்துவதற்கான இடமாக ஹைதராபாத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
  • பாதுகாப்பான இணைய தினம் ஆனது ஆண்டுதோறும் பிப்ரவரி 08 ஆம் தேதியன்று அனுசரிக்கப்படுகிறது.
    • 2024 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, ‘’Inspiring Change. Making a difference, managing influence and navigating change online’’ என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்