திருப்பத்தூர் மாவட்டம், ஏலகிரி மலையில் உள்ள மலையாளிப் பழங்குடியினத்தைச் சேர்ந்த 23 வயது பெண் V.ஸ்ரீபதி, தனது சமூகத்திலிருந்து முதல் உரிமையியல் நீதிபதியாக தேர்வு பெற்று வரலாறு படைத்துள்ளார்.
பர்கூர் கால்நடை ஆராய்ச்சி நிலையம் ஆனது பர்கூர் இனத்தைக் காத்ததற்காக இந்திய வேளாண் ஆராய்ச்சி சபையின் தேசிய விலங்கின மரபணு வள வாரியத்தின் (NBAGR) பெரிய அசை போடும் கால்நடைகள் பிரிவில் (நிறுவனங்கள்) மூன்றாவது இடத்தைப் பெற்றது.
2026 ஆம் ஆண்டில் தேர்தல் தொகுதிகளை மறுசீரமைப்பதற்கான திட்டமிடப்பட்ட எல்லை மறுநிர்ணய நடவடிக்கை மற்றும் மத்திய அரசினால் முன்மொழியப்பட்ட "ஒரு நாடு, ஒரு தேர்தல்" கொள்கையை எதிர்த்து தமிழ்நாடு சட்டமன்றம் ஆனது இரண்டு தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது.
மத்திய நீர் வளத் துறை அமைச்சகமானது, கழிவு நீர் சுத்திகரிப்பு மற்றும் மறு பயன்பாட்டில் மேற்கொண்ட சிறந்த பல்வேறு முயற்சிகளுக்காக நொய்டா என்ற நகரத்தினை "சிறந்த தண்ணீர் போராளி" நகரமாக அறிவித்து கௌரவித்துள்ளது.
முன்னாள் கிரிக்கெட் அணித் தலைவர் அனில் கும்ப்ளேவுக்குப் பிறகு டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை சுழல் பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் பெற்றுள்ளார்.
இந்தியாவின் முன்னணி ஆடவர் ஒற்றையர் பிரிவு டென்னிஸ் வீரர் சுமித் நாகல் தனது சென்னை ஓபன் சேலஞ்சர் போட்டியில் வெற்றி பெற்றதையடுத்து ATPயின் முதல் 100 இடங்களில் 98வது இடத்தைப் பெற்றுள்ளார்.
1973 ஆம் ஆண்டில் ATP தரவரிசை அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து இதுவரை 10 இந்திய ஆண்கள் மட்டுமே முதல் 100 இடங்களை எட்டியுள்ளனர்.