துபாயில் நடந்த 2024 ஆம் ஆண்டு உலக அரசாங்க உச்சி மாநாட்டில், செயற்கை நுண்ணறிவு மூலம் இயக்கப்படும் பல்வேறு அரசு துறை சேவைகளில் முன்னோடியாக விளங்கியதற்காக இந்திய நாடானது, மதிப்புமிக்க 9வது GovTech (அரசு தொழில்நுட்ப சேவை) பரிசைப் பெற்றுள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனமானது 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சந்தை மூலதனத்தை எட்டிய முதல் இந்திய நிறுவனமாக மாறியுள்ளது.
முதலாவது எண்ணிம இந்தியாவிற்கான எதிர்காலத் திறன்கள் உச்சி மாநாடு ஆனது அசாம் மாநிலத்தின் கௌகாத்தியில் நடைபெற்றது.
1951 முதல் 1962 ஆம் ஆண்டு வரை இந்தியாவிற்காக 11 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய இந்தியாவின் மிகவும் வயதான டெஸ்ட் கிரிக்கெட் வீரர் தத்தாஜிராவ் கெய்க்வாட் சமீபத்தில் குஜாரத்தின் பரோடாவில் காலமானார்.
இந்தியாவின் முதல் முன்மாதிரியான ஓட்டுநர் இல்லாத மெட்ரோ இரயிலின் சோதனை ஓட்டமானது பெங்களூருவில் நடத்தப்பட உள்ளது.
ஐக்கிய நாடுகளின் மத நல்லிணக்க வாரக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக திருவனந்தபுரத்தில் உலக அமைதி உச்சி மாநாடு நடைபெற்றது.
இந்த உச்சி மாநாட்டின் கருத்துரு, 'ஒற்றுமை, அமைதியின் சக்தி மற்றும் மனித குலத்தின் நிலையான மேம்பாட்டினை மறுவரையறை செய்தல்' என்பதாகும்.
கண்ணீர்ப் புகைக் குண்டுகளை ஏவுவதற்கு ஆளில்லா விமானங்களை (DRISHYAA ஆளில்லா விமானங்கள்) பயன்படுத்திய இந்தியாவின் முதல் காவல் படைப் பிரிவு என்ற பெருமையை ஹரியானா காவல்துறை பெற்றுள்ளது.
2022 ஆம் ஆண்டில் எல்லைப் பாதுகாப்புப் படையின் (BSF) கண்ணீர்ப் புகை குண்டு பிரிவானது (TSU) ஆளில்லா விமானங்கள் அடிப்படையிலான இந்தக் கண்ணீர்ப் புகை குண்டு ஏவும் கருவியை உருவாக்கியது.
ஐநாவிற்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதியான ருசிரா காம்போஜ் சமூக மேம்பாட்டு ஆணையத்தின் 62வது அமர்வுக்குத் தலைமை தாங்கினார்.
ஜெர்மனி நாடானது உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறி ஜப்பான் நாட்டினைப் பின்னுக்குத் தள்ளியதோடு, ஜப்பான் நாட்டின் பொருளாதாரமானது மந்த நிலைக்குத் தள்ளப்பட்டது.
குறிப்பிடப்படாத குற்றச்சாட்டுகளுக்காக, முன்னதாக மரண தண்டனை விதிக்கப் பட்டிருந்த எட்டு இந்தியக் கடற்படை அதிகாரிகளைக் கத்தார் நீதிமன்றம் விடுவித்து உள்ளது.
இந்திய நாடானது, சதுரங்க ஒலிம்பியாட் போட்டியின் ஜோதியை 2024 ஆம் ஆண்டு போட்டியை நடத்த உள்ள ஹங்கேரி நாட்டிடம் வழங்கியது.
தன்பாலின திருமணத்தைச் சட்டப்பூர்வமாக்கிய முதல் மரபுவழி (வைதீக) கிறிஸ்தவ நாடாக கிரீசு நாடு மாறியுள்ளது.
அர்செனேல் குழுமம் மற்றும் சவுதி அரேபிய இரயில்வே (SAR) நிர்வாகமானது, சமீபத்தில் 2025 ஆம் ஆண்டின் இறுதியில் நாடு முழுதும் பயணிக்கும் முதல் சொகுசு இரயிலை உருவாக்குவதற்காக கைகோர்த்துள்ளதாக அறிவித்துள்ளது.
பாலைவனத்தின் கனவு என்று அழைக்கப்படும் இந்த இரயில் ஆனது முழுவதுமாக சவுதி நாட்டின் பாணியிலும் மற்றும் பாரம்பரியத்தாலும் ஈர்க்கப்பட்ட வடிவமைப்பில் இத்தாலியில் தயாரிக்கப்பட உள்ளது.
சவுதி அரேபியா நாடானது இரண்டாவது உலக பாதுகாப்பு கண்காட்சியை ரியாத் நகரில் நடத்தியது.
இந்திய நாட்டின் சார்பாக முப்படைகளின் பெண்கள் படைப்பிரிவு இதில் பங்கேற்றது.