தமிழ்நாடு சட்டமன்றம் ஆனது, 1959 ஆம் ஆண்டின் இந்து சமய மற்றும் அறநிலையத் துறை சட்டத்தின் 66வது பிரிவின் (1) வது துணைப்பிரிவின் (j) என்ற விதியை நீக்குவதற்கான மசோதாவை அறிமுகப்படுத்தியது.
இந்த விதியானது, “ஒரு நபர் தொழுநோயால் பாதிக்கப்பட்டிருந்தால், அவர் எந்தவொரு சமய அமைப்பின் அறங்காவலராக நியமிக்கப்படுவதற்கும், அந்தப் பொறுப்பினை வகிக்கவும் தகுதியற்றவர்" என்று கூறுகிறது.
எழுத்தாளரும் காங்கிரஸ் அரசியல்வாதியுமான சசி தரூர் அவர்களுக்கு, பிரான்சு நாட்டின் உயரிய குடிமை விருதான “செவாலியர் டி லா லெஜியன் டி ஹானர்” விருது சமீபத்தில் வழங்கப்பட்டுள்ளது.
தவறான தகவல் பரவல் எதிர்ப்புக் கூட்டணி (MCA) மற்றும் மெட்டா ஆகியவை இணைந்து, வாட்ஸ்அப்பில் (புலனம் ஊடகத்தில்) பரவும் தகவல்களின் மெய்த் தன்மையைச் சரிபார்ப்பதற்கான பிரத்தியேக உதவி எண் சேவையினை அறிமுகம் செய்வதற்கான தனது திட்டங்களை அறிவித்துள்ளன.