TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

February 26 , 2024 272 days 278 0
  • இந்தியாவின் முதல் திறன் இந்தியா மையம் ஆனது ஒடிசாவின் சம்பல்பூரில் திறக்கப் பட்டது.
  • மத்தியப் பிரதேச மாநில அரசானது, 2024-25 ஆம் கல்வியாண்டிலிருந்து 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வாரம் ஒருமுறை 'புத்தகப்பை இல்லாத' தினமாக அறிவித்துள்ளது.
  • உத்தரப் பிரதேச மாநிலத்தின் கோண்டா வனத்துறையானது, ஆமைகளின் செழுமையான பன்முகத் தன்மைக்குப் பெயர் பெற்ற சர்ஜு நதியில் ஆமைகள் வளங்காப்பகத்தினை நிறுவ திட்டமிட்டுள்ளது.
  • சண்டிகர் தொழில்துறை மற்றும் சுற்றுலா மேம்பாட்டுக் கழகமானது சுக்னா ஏரிக்கு அருகில், வட இந்தியாவிலேயே முதல் முறையாக வெறும் மூன்றே நிமிடங்களில் பீட்சாக்களை தயார் செய்யும் வகையிலான பீட்சா ATM என்ற கருவியினை நிறுவியுள்ளது.
  • இந்திய ரிசர்வ் வங்கியானது, எண்ணிம பண வழங்கீட்டுச் சேவை நிறுவனமான Mswipe Technologies நிறுவனத்திற்கு பண வழங்கீட்டுத் தொகுப்பு நிறுவன (PA) உரிமம் வழங்கப் பட்டுள்ளது.
  • இந்திய நாடானது, 18 ஆண்டுகளுக்குப் பிறகு பருப்பு வகைகள் 24 எனப்படும் உலகளாவியப் பருப்பு வகைகள் மாநாட்டினைச் சமீபத்தில் புது தில்லியில் நடத்தியது.
  • சுவீடன் நாட்டுப் புகைப்படக் கலைஞர் அலெக்ஸ் டாசன், அவரது ‘திமிங்கல எலும்புகள்’ (Whale Bones) என்ற புகைப்படத்திற்காக 2024 ஆம் ஆண்டின் சிறந்த கடலடிப் புகைப்படக் கலைஞராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  • சர்வதேச சூரியசக்திக் கூட்டணி (ISA) ஆனது, சமீபத்தில் மால்டாவைத் தனது கூட்டமைப்பில் இணைந்த 119வது நாடாக அறிவித்துள்ளது.
  • இந்தியா, வங்காளதேசம் மற்றும் பாகிஸ்தான் உட்பட 19 நாடுகளின் பங்கேற்புடன் 'சாந்தி பிரயாஸ் IV' எனப்படுகின்ற ஒரு பன்னாட்டு இராணுவப் பயிற்சியானது நேபாளத்தில் தொடங்கியது.
  • கிரிக்கெட்டில் பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் 271 இன்னிங்ஸ்களில் 10,000 டி20 ரன்களை எட்டிய விளையாட்டு வீரர் என்ற பெருமையினைப் பெற்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்