இந்தியாவின் முதல் திறன் இந்தியா மையம் ஆனது ஒடிசாவின் சம்பல்பூரில் திறக்கப் பட்டது.
மத்தியப் பிரதேச மாநில அரசானது, 2024-25 ஆம் கல்வியாண்டிலிருந்து 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வாரம் ஒருமுறை 'புத்தகப்பை இல்லாத' தினமாக அறிவித்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலத்தின் கோண்டா வனத்துறையானது, ஆமைகளின் செழுமையான பன்முகத் தன்மைக்குப் பெயர் பெற்ற சர்ஜு நதியில் ஆமைகள் வளங்காப்பகத்தினை நிறுவ திட்டமிட்டுள்ளது.
சண்டிகர் தொழில்துறை மற்றும் சுற்றுலா மேம்பாட்டுக் கழகமானது சுக்னா ஏரிக்கு அருகில், வட இந்தியாவிலேயே முதல் முறையாக வெறும் மூன்றே நிமிடங்களில் பீட்சாக்களை தயார் செய்யும் வகையிலான பீட்சா ATM என்ற கருவியினை நிறுவியுள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கியானது, எண்ணிம பண வழங்கீட்டுச் சேவை நிறுவனமான Mswipe Technologies நிறுவனத்திற்கு பண வழங்கீட்டுத் தொகுப்பு நிறுவன (PA) உரிமம் வழங்கப் பட்டுள்ளது.
இந்திய நாடானது, 18 ஆண்டுகளுக்குப் பிறகு பருப்பு வகைகள் 24 எனப்படும் உலகளாவியப் பருப்பு வகைகள் மாநாட்டினைச் சமீபத்தில் புது தில்லியில் நடத்தியது.
சுவீடன் நாட்டுப் புகைப்படக் கலைஞர் அலெக்ஸ் டாசன், அவரது ‘திமிங்கல எலும்புகள்’ (Whale Bones) என்ற புகைப்படத்திற்காக 2024 ஆம் ஆண்டின் சிறந்த கடலடிப் புகைப்படக் கலைஞராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சர்வதேச சூரியசக்திக் கூட்டணி (ISA) ஆனது, சமீபத்தில் மால்டாவைத் தனது கூட்டமைப்பில் இணைந்த 119வது நாடாக அறிவித்துள்ளது.
இந்தியா, வங்காளதேசம் மற்றும் பாகிஸ்தான் உட்பட 19 நாடுகளின் பங்கேற்புடன் 'சாந்தி பிரயாஸ் IV' எனப்படுகின்ற ஒரு பன்னாட்டு இராணுவப் பயிற்சியானது நேபாளத்தில் தொடங்கியது.
கிரிக்கெட்டில் பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் 271 இன்னிங்ஸ்களில் 10,000 டி20 ரன்களை எட்டிய விளையாட்டு வீரர் என்ற பெருமையினைப் பெற்றுள்ளார்.