TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

February 28 , 2024 142 days 213 0
  • ‘அமுல்’ தயாரிப்பின் உரிமைதார நிறுவனமான குஜராத் கூட்டுறவு பால் சந்தைப் படுத்தல் கூட்டமைப்பு (GCMMF) ஆனது சமீபத்தில் தனது பொன்விழாவை (50வது ஆண்டு) கொண்டாடியது.
  • உலக வங்கியின் பிரதிநிதிகள் குழுவானது, நாட்டில் முதலாவது துணை நிலை மட்டப் பருவநிலை நெகிழ்திறன் பசுமை நிதியாக அமையப் போகின்ற நிதியை நிறுவச் செய்வதற்காக வேண்டி மாநில அரசுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்வதற்காக கோவா வந்தடைந்தது.
  • கௌஹாத்தியின் இந்தியத் தொழில்நுட்பக் கழகம் (IIT-G) ஆனது, இந்தியாவின் மிகப்பெரிய ஆளில்லா விமானங்களுக்கான விமானிகள் பயிற்சி நிறுவனத்தினைத் தொடங்கியுள்ளது.
  • இளையோர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் ஆனது, வரவிருக்கும் 7வது வடகிழக்கு இளையோர் திருவிழாவின் (2024) முத்திரைச் சின்னத்தினை வெளியிட்டுள்ளது.
    • பியாரியின் இலைக் குரங்கு வகையானது இந்தத் திருவிழாவின் உருவச் சின்னமாக அறிவிக்கப் பட்டுள்ளது.
  • தற்போது நடைபெற்று வரும் 2024 ஆம் ஆண்டு ரைசினா பேச்சுவார்த்தையினை ஒட்டி இந்தியா-நார்டிக்-பால்டிக் நாடுகளின் கூட்டத்தை இந்தியா நடத்தியது.
    • சுவீடன், பின்லாந்து, டென்மார்க், எஸ்டோனியா மற்றும் லாட்வியா ஆகிய ஐந்து நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் மற்றும் நார்வே, ஐஸ்லாந்து மற்றும் லிதுவேனியா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
  • ஜசிந்தா கல்யாண், விளையாட்டுத் துறையின் வரலாற்றில் நாட்டின் முதல் பெண் கிரிக்கெட் ஆடுகள சீர்திருத்தப் பொறுப்பாளர் என்ற வரலாற்றினைப் படைத்துள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்