TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

March 1 , 2024 140 days 237 0
  • வங்காளதேசத்தின் டாக்கா நகரில் உள்ள இந்திரா காந்தி கலாச்சார மையத்தில் அமைக்கப்பட்டுள்ள காஷி சுதந்திரப் போராட்ட வீரர் யு டிரோட் சிங் சையீம் அவர்களின் மார்பளவு உருவச் சிலையை மேகாலயா அரசு திறந்து வைத்துள்ளது.
  • இந்திய இராணுவம் மற்றும் ஜப்பான் எல்லைக் காப்புப் படை ஆகியவற்றிற்கு இடையேயான ‘தர்மா கார்டியன்’ எனப்படும் 5வது கூட்டு இராணுவப் பயிற்சியானது ராஜஸ்தானில் நடைபெற்று வருகிறது.
  • இந்திய மகளிர் அணியானது மலேசியாவில் நடைபெற்ற 2024 ஆம் ஆண்டு ஆசிய பாட்மிண்டன் அணி சாம்பியன்ஷிப் போட்டியில் முதல் முறையாக தங்கப் பதக்கம் வென்றுள்ளது.
  • ரவிச்சந்திரன் அஸ்வின் இந்திய நாட்டில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை (352) வீழ்த்தி அனில் கும்ப்ளேவின் (350) சாதனையினை முறியடித்து சாதனை படைத்துள்ளார்.
  • இந்தியாவில் பிறந்த பொருளாதார நிபுணர் கீதா பத்ரா, உலக வங்கியின் உலகளாவிய சுற்றுச்சூழல் மையத்தின் தற்சார்பு மதிப்பீட்டு அலுவலகத்தின் (IEO) புதிய இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்