உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஹைட்ரஜன் எரிபொருள் மின்கலத்தில் இயங்கும் ‘சுச்சேதா’ என்று பெயரிடப்பட்ட, இந்தியாவின் முதல் படகு கொச்சியில் அறிமுகப் படுத்தப் பட்டது.
V.O.சிதம்பரனார் துறைமுகம் ஆனது நாட்டின் முதல் பசுமை ஹைட்ரஜன் மையத் துறைமுகமாகும்.
S.விஜயதரணி ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, விளவங்கோடு சட்டமன்றத் தொகுதிக்கான உறுப்பினர் பதவி காலியானதாக சட்டமன்றச் செயலகம் அறிவித்து உள்ளது.
பிரதமர் அவர்கள் இராஜ்கோட் (குஜராத்), பதிண்டா (பஞ்சாப்), ரேபரேலி (உத்தரப் பிரதேசம்), கல்யாணி (மேற்கு வங்காளம்) மற்றும் மங்களகிரி (ஆந்திரப் பிரதேசம்) ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள ஐந்து அகில இந்திய மருத்துவ அறிவியல் கல்விக் கழகங்களை (எய்ம்ஸ்) திறந்து வைத்தார்.
இந்திய சூரிய சக்தி கழக லிமிடெட் (SECI) நிறுவனமானது, சத்தீஸ்கரின் ராஜ்நந்த் காவ்ன் எனுமிடத்தில் அமைக்கப்பட்டுள்ள, சூரிய சக்தியைப் பயன்படுத்தி ஆற்றலைச் சேமிக்கும் இந்தியாவின் மிகப்பெரிய மின்கல ஆற்றல் சேமிப்பு கட்டமைப்பினை (BESS) வெற்றிகரமாக இயக்கியுள்ளது.
புகழ்பெற்ற கஜல் (அரபுக் கவிதை) பாடகர் பங்கஜ் உதாஸ் சமீபத்தில் மும்பையில் காலமானார்.
மிகப்பெரிய உலகளாவிய ஜவுளி நிகழ்வுகளில் ஒன்றான 2024 ஆம் ஆண்டு பாரத் டெக்ஸ் நிகழ்ச்சியானது டெல்லியில் தொடங்கப்பட்டது.
புனேவில் உள்ள தேசிய இயற்கை மருத்துவ நிறுவனம் (NIN) மற்றும் அரியானாவின் ஜஜ்ஜரில் உள்ள தேவர்கானா கிராமத்தில் உள்ள மத்திய யோகா மற்றும் இயற்கை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் (CRIYN) இரண்டு ‘ஆயுஷ் திட்டங்கள்’ சமீபத்தில் திறக்கப் பட்டன.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள், மத்திய மத்திய ஊழல் தடுப்பு ஆணையத்தின் ஊழல் தடுப்பு ஆணையராக A.S. ராஜீவ் என்பவரை நியமித்துள்ளார்.
உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி A.M. கான்வில்கர் ஊழல் தடுப்பு குறை தீர்ப்பாளரான லோக்பால் அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.