உலகப் பல்லுயிர்ப்பெருக்க கட்டமைப்பு நிதியத்தின் முதல் சபை கூட்டம் ஆனது சமீபத்தில் அமெரிக்காவின் வாஷிங்டன் DC நகரில் நடைபெற்றது.
மத்திய அரசானது, பொதுவான 'உங்கள் வாடிக்கையாளரை தெரிந்து கொள்ளுங்கள்' விதிகளை வகுப்பதற்காக வேண்டி, நிதித் துறைச் செயலாளர் T.V. சோமநாதன் அவர்கள் தலைமையில் ஒரு நிபுணர் குழுவை அமைத்துள்ளது.
இந்தியக் கவிஞர்-அரசுமுறை அதிகாரி, நூல் ஆசிரியர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் அபய். K அவர்களால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட 'Fool Bahadur' எனப்படும் முதல் மகாஹி மொழி புதினத்தின் ஆங்கில மொழிப் பெயர்ப்பானது பீகாரின் பாட்னா நகரில் வெளியிடப்பட்டது.
மகதி என்றும் அழைக்கப்படுகின்ற மகாஹி மொழி கிழக்கு இந்தியாவின் பீகார், ஜார்க்கண்ட் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் பேசப்படும் இந்திய-ஆரிய மொழியாகும்.
உலகின் முதல் வேத கடிகாரம் ஆனது உஜ்ஜயினியில் கட்டமைக்கப்பட்டுள்ள 85 அடி உயர கோபுரத்தில் நிறுவப்பட்டுள்ளது.
இந்தக் கடிகாரம் ஆனது இரண்டு சூரிய உதயங்களுக்கு இடையே உள்ள காலத்தை 48 நிமிடங்கள் கொண்ட 30 பகுதிகளாக (மணிநேரமாக) பிரித்துக் காட்டும்.
இந்திய உழவர் உரக் கூட்டுறவு லிமிடெட் (IFFCO) நிறுவனமானது உலகின் முதல் 300 கூட்டுறவு நிறுவனங்களில் ஒரு முன்னணி கூட்டுறவு நிறுவனமாக மீண்டும் தரநிலைப் படுத்தப் பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் உலக வர்த்தக நிறுவனத்தின் 13வது அமைச்சர்கள் மாநாடு (MC) நடைபெற்றது.