TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

March 7 , 2024 262 days 328 0
  • தமிழக முதல்வர் அவர்கள், அரசு அதிகாரிகள் குடிமக்களுடன் கலந்துரையாடி மாநில அரசின் பல்வேறு முன்னெடுப்புகள் பற்றிய கருத்துக்களைச் சேகரிக்கும் வகையில்  'நீங்கள் நலமா?' என்ற திட்டத்தினைத் தொடங்கி வைத்தார்.
  • சென்னையில் உள்ள தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (NITTTR) ஆனது, பல்கலைக்கழக மானியக் குழுச் சட்டத்தின் 3வது பிரிவின் கீழ் பல்கலைக்கழகமாக மாற்றப்பட்டது.
  • சுற்றுலா அமைச்சகம் ஆனது, சத்ரபதி சம்பாஜிநகரில் (மகாராஷ்டிரா மாநிலம்) உள்ள யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியத் தளங்களான அஜந்தா மற்றும் எல்லோரா குகைகளை அதன் இரண்டாவது ஸ்வதேஷ் தர்ஷன் திட்டத்தின் கீழ் சேர்த்துள்ளது.
  • குஜராத் மாநில வனத் துறையானது, கட்ச் மாவட்டத்தில் உள்ள பான்னி புல்வெளி வளங் காப்பகத்தில் இந்தியாவின் முதல் சிறுத்தை வளங்காப்பு இனப்பெருக்க மையத்தினை அமைக்க உள்ளது.
    • இந்த மையம் ஆனது திறந்தவெளியில் தனிமைப்படுத்தப்பட்ட கூண்டுகளைக் கொண்டிருக்கும் என்பதோடு அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் சிறுத்தைகளைக் குஜராத்திற்கு கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • ஸோஹோ கார்ப்பரேஷன் நிறுவனமானது, சிறிய மற்றும் நடுத்தரப் பிரிவுகளில் உள்ள சில்லறை விற்பனைக் கடைகள் தங்களது அன்றாடச் செயல்பாடுகளை ஒழுங்கு படுத்துவதற்காக ஷாக்யா என்ற நவீன விற்பனைச் செயலாக்க வசதியை (PoS) அறிமுகப் படுத்தியுள்ளது.
  • ஜம்முவில் தாவி நதிக் கரையில் நடைபெறும் 4 நாட்கள் அளவிலான தாவி திருவிழாவானது, டக்கர் கலாச்சாரத்தினைக் காட்சிப்படுத்துகிறது.
  • சுவீடன் நாடானது, வாஷிங்டன் உடன்படிக்கைக்கு ஒப்புதல் அளிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டு, அதிகாரப்பூர்வமாக வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பின் (நேட்டோ) 32வது உறுப்பினராக விரைவில் மாறவுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்