TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

March 9 , 2024 132 days 183 0
  • பீகாரின் பரௌனியில் அமைக்கப்பட்ட இந்துஸ்தான் உர்வரக் & ரசயான் லிமிடெட் (HURL) உர ஆலையானது, சமீபத்தில் திறந்து வைக்கப்பட்டது.
  • லார்சன் & டூயூப்ரோ (L&T) நிறுவனமானது, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தனது முதல் மின்பகுப்பானை, குஜராத்தின் ஹசிரா நகரில் அமைந்துள்ள பசுமை ஹைட்ரஜன் ஆலையில் நிறுவி இயக்கியுள்ளது.
  • இந்தியாவின் முதல் அருகி வரும் கங்கை நதி ஓங்கில் இனங்கள் ஆராய்ச்சி மையம் ஆனது பீகாரின் பாட்னா நகரில் திறக்கப்பட்டுள்ளது.
  • இந்திய விலங்கியல் ஆய்வு நிறுவனம் ஆனது ஒடிசா மற்றும் மேற்கு வங்காளக் கடற்கரையில் கடல் அட்டை மெல்லுடலி என்ற புதிய வகையினைக் கண்டறிந்து உள்ளது.
    • இது குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்களின் பெயரால் அழைக்கப் படுகிறது.
  • கேரள மாநிலம் ஆனது, ஐரிஸ் எனப்படும் தனது முதல் ஆக்கமிக்க செயற்கை நுண்ணறிவு ஆசிரியையினை அறிமுகப்படுத்தியுள்ளது.
    • இது நிதி ஆயோக் அமைப்பினால் தொடங்கப்பட்ட அடல் மேம்பாட்டு ஆய்வகங்கள் (ATL) திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது.
  • 'ஓஷன் கிரேஸ்' என்ற பெயரில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் ASTDS இழுவைக் கப்பல் மற்றும் நடமாடும் மருத்துவ வாகனம் (MMU) ஆகியவை சமீபத்தில் தொடங்கி வைக்கப் பட்டன.
  • நதிக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள இந்தியாவின் முதல் மெட்ரோ இரயில் சுரங்கப் பாதையானது மேற்கு வங்காள மாநிலத்தின் கொல்கத்தா நகரில் திறக்கப் பட்டுள்ளது.
  • ஸ்பெயின் நாட்டின் மகளிர் கால்பந்து அணியானது பிரான்சு அணியை வீழ்த்தி தனது முதல் UEFA மகளிர் தேசிய லீக் போட்டியில் பட்டம் வென்று, வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியைப் பெற்றுள்ளது.
  • பணியாளர் பாராட்டுத் தினம் ஆனது ஒவ்வோர் ஆண்டின் மார்ச் மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையன்று அனுசரிக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்