ஒருங்கிணைந்த வேளாண் செயல்பாட்டு மற்றும் கட்டுப்பாட்டு மையம் ஆனது தேசிய தலைநகரில் உள்ள கிருஷி பவனில் திறக்கப்பட்டுள்ளது.
புரவலரும் எழுத்தாளருமான சுதா மூர்த்தி அவர்களின் பெயர் மாநிலங்களவையின் உறுப்பினர் பதவியில் நியமிக்கப்பதற்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
பல புத்தகங்களை எழுதியுள்ள இவர் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் N.R. நாராயண மூர்த்தியின் மனைவியும், மூர்த்தி அறக்கட்டளையின் தலைவரும் ஆவார்.
முத்தையா முரளிதரன் மற்றும் ஷேன் வார்னே ஆகியோர் அடங்கிய, டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 700 விக்கெட்கள் வீழ்த்திய நபர்களின் பட்டியலில் இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் சமீபத்தில் இணைந்துள்ளார்.
தட்டம்மை மற்றும் ரூபெல்லாவை எதிர்த்துப் போராடுவதற்கான நாட்டின் முன்னெடுப்புகளை அங்கீகரிக்கும் வகையில், தட்டம்மை மற்றும் ரூபெல்லா கூட்டமைப்பு ஆனது இந்தியாவிற்கு மதிப்புமிக்க தட்டம்மை மற்றும் ரூபெல்லா சாம்பியன் (வாகையர்) விருதினை வழங்கியுள்ளது.
ஆண்டிற்கு இருமுறை நடைபெறும் கடற்படைத் தளபதிகள் மாநாட்டின் 2024 ஆம் ஆண்டிற்கான முதல் மாநாடு ஆனது INS விக்ரமாதித்யா என்ற விமானம் தாங்கி கப்பலில் நடைபெற்றது.
கோவாவில் அமைந்துள்ள FLY91 விமானப் போக்குவரத்து நிறுவனத்திற்கு வணிக நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கு பொது விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) ஒப்புதல் அளித்துள்ளது.
முதல் பாரத் நீராவி கொதிகலன் கண்காட்சி (2024) ஆனது, அசாம் மாநிலத்தின் கௌகாத்தியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.