கடலூரில் உள்ள மீன்வளத் துறையின் துணை இயக்குநரான P. ரம்யாலட்சுமி என்பவர் “சுருக்கமடி மீன் பிடித்தலின்” சட்டவிரோத நடைமுறையின் மீது நடவடிக்கை எடுத்ததற்காகவும் அவருடைய தைரியம் மற்றும் சாகசங்கள் ஆகியவற்றிற்காகவும் 2019 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் கல்பனா சாவ்லா விருதினை அவர் பெற்று இருக்கின்றார்.
இந்த “சுருக்கமடி மீன் பிடித்தலானது” பாரம்பரிய மீன் பிடிப்பாளர்களின் மீன்பிடிப்பை அச்சுறுத்தல் செய்கின்றது. இது பிராந்தியத்தில் உள்ள ஒட்டுமொத்த கடல்சார் சுற்றுச்சூழலுக்கும் ஒரு அச்சுறுத்தலாக விளங்குகின்றது.
நாட்டின் முதலாவது மத்திய வேதிப் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப மையமானது (Central Institute of Chemical Engineering and Technology - CICET) குஜராத்தில் அமைக்கப்படும் என்று மத்திய கப்பல் போக்குவரத்து துறை இணையமைச்சர் மன்சுக் மண்டாவியா அறிவித்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சகமானது அனைத்து மத்திய ஆயுத காவல் படை (Central Armed Police Force - CAPF) வீரர்களின் ஓய்வு வயதையும் 60 ஆக நிர்ணயித்துள்ளது.
மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை, அசாம் ரைபில்ஸ், மத்திய ரிசர்வ் காவற் படை, எல்லைப் பாதுகாப்புப் படை, இந்தோ-திபெத்திய எல்லை காவற் படை சாஸ்த்ரா சீமா பால் ஆகியவை அனைத்தும் CAPF கீழ் அடங்கும்.
ஜார்க்கண்டின் வளைபறிக்கும் தவளையின் ஒரு புதிய இனமானது உறுதி செய்யப்பட்டு, இந்திய விலங்கியல் ஆய்வு நிறுவனத்தின் பதிவுகளில் வெளியிடப்பட்டுள்ளது.
இது “ஸ்பாஹெரோதெகா மகதம்” என்று பெயரிடப்பட்டுள்ளது. இது பொதுவாக வளை பறிக்கும் மகதத் தவளை என்று அழைக்கப்படுகின்றது. இது 2015 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்தியாவின் துணைக் குடியரசுத் தலைவர் சாந்தி நிகேதனில் அமைந்துள்ள ரவீந்திரநாத் தாகூரின் பாரம்பரிய வீடான “சியாமலி வீட்டைத்” திறந்து வைத்து அதனை நாட்டிற்கு அர்ப்பணித்தார்.
சியாமலி வீடானது 1934 ஆம் ஆண்டில் சாந்தி நிகேதனில் உள்ள உள்ளூர் சந்தால் இன மக்களால் கட்டப்பட்ட ஒரு மண் வீடாகும்.
பன்னாட்டு இயற்கை நிதியத்தினால் (World Wide Fund for Nature - WWF) மேற்கொள்ளப்பட்ட “வனப் பன்முகத் தன்மை” என்ற முதலாவது சர்வதேச ஆய்வின்படி, 1970 ஆம் ஆண்டு முதல் காடுகளில் உள்ள வன விலங்குகளின் எண்ணிக்கையானது 53 சதவிகிதம் குறைந்துள்ளது.
இந்தப் புதிய கண்டுபிடிப்புகள் வனச் சிறப்புத்துவக் குறியீட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தக் குறியீடு காடுகளில் மட்டுமே வாழும் வன விலங்குகளைக் கண்காணிக்கின்றது.
ஆகஸ்ட் 19 ஆம் தேதியானது சர்வதேச மனிதக் குரங்கு தினமாக அனுசரிக்கப்படுகின்றது.