மத்தியப் பிரதேசத்தின் ஆளுநர் ஆனந்தி பெண் படேல் சத்தீஸ்கர் மாநில கூடுதல் ஆளுநராக இந்திய குடியரசுத் தலைர் ராம்நாத் கோவிந்தால் நியமிக்கப்பட்டுள்ளார். சத்தீஸ்கர் மாநில ஆளுநர் பால்ராம்ஜி தாஸ் தான்டன் மறைந்ததையடுத்து இந்த கூடுதல் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
ஆயுதப் படையில் பணிபுரியும் பணியாளர் தேர்வு ஆணையத்தின் பெண் அதிகாரிகளுக்கு நிரந்தர ஆணையம் அமைக்கப்படும் என இந்தியப் பிரதமர் தனது 72வது சுதந்திர தின உரையின் போது குறிப்பிட்டார். தற்போதைய திட்டத்தின் கீழ் ஆயுதப்படையில் பெண்கள் கீழ்நிலை பதவிகளில் அமர்த்தப்படாமல் அதிகாரிகள் நிலையிலேயே பணியமர்த்தப் படுகின்றனர்.
இந்தியன் வங்கி சங்கம் இகோன் செஹெண்டர் இண்டர்நேஷனல் (Egon Zehnder International) என்ற நிறுவனத்தை வங்கிகள் மன்ற அமைப்பு (Banks Board Bureau - BBB) என்ற நிறுவனத்திற்கு அறிவொளி பங்குதாரராக நியமித்துள்ளது. அறிவொளி பங்குதாரராக இகோன் செஹெண்டர் இண்டர்நேஷனல் ஆனது இந்தியாவின் பொதுத் துறை வங்கிகளுக்கு தலைசிறந்த தலைமை அபிவிருத்தி வியூகங்களை வடிவமைத்து செயல்படுத்த மற்றும் நிறுவனப்படுத்த உதவுகிறது.
இரஷ்யாவிற்கான இந்தியாவின் அடுத்த தூதராக மூத்த இராஜ தந்திரி D.பால வெங்கடேஷ் வர்மா நியமிக்கப்பட்டுள்ளார். 1998ம் ஆண்டு இந்தியப் வெளியுறவுச் சேவை அதிகாரியான வர்மா தற்போது ஸ்பெயினில் இந்திய தூதராக பணியாற்றுகிறார்.
QR கோடு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி டிஜிட்டல் அருங்காட்சியகத்தை உருவாக்கும் இந்தியப் பிரதமரின் தொலைநோக்குப் பார்வையினையடுத்து இரயில்வே அமைச்சகமானது இந்திய இரயில்வேயின் பாரம்பரியத்தைப் பற்றிய விழிப்புணர்வை பரவச் செய்யும் பொருட்டு இந்த வருட சுதந்திரத் தினத்தன்று 22 இரயில் நிலையங்களில் ‘டிஜிட்டல் திரையை’ செயல்படுத்தியுள்ளது.
இத்திட்டமானது இந்திய இரயில்வேயின் மரபுக்களை ஒன்று முதல் இரண்டு நிமிட நீளமுடைய திரைப்படத் துண்டுகளை எல்.இ.டி திரையில் காண்பிப்பதாகும்.
தமிழ்நாடு அரசால் பேரிடர் மேலாண்மைக்கென்று www.tnsdma.com என்ற வலைதளம் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் பேரிடர் மேலாண்மையில் தொடர்புடைய அரசு ஊழியர்களுக்கு பயிற்சி மற்றும் பேரிடர் அபாய மேலாண்மை உத்திகளை வழங்குவதற்கான ‘ஆசியன் பேரிடர் தயார்நிலை மையத்துடன்’ (Asian Disaster Preparedness Centre) அரசு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.