தமிழக அரசானது 2024 ஆம் ஆண்டிற்கான அவ்வையார் விருதிற்கு, பெண்ணியவாதி, ஆசிரியை மற்றும் நாவலாசிரியர் பாமா ஃபௌஸ்டினா சூசைராஜினைத் தேர்வு செய்துள்ளது.
சமீபத்தில் ஓய்வு பெற்ற V. பழனிகுமாருக்கு அடுத்தப்படியாக இந்திய ஆட்சிப் பணி அதிகாரி P. ஜோதி நிர்மலாசாமி தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக நியமிக்கப் பட்டுள்ளார்.
சர்தார் ரமேஷ் சிங் அரோரா பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தின் முதல் சீக்கிய அமைச்சராகப் பதவியேற்று வரலாறு படைத்துள்ளார்.
ஜம்மு & காஷ்மீர் காவல்துறையானது ஜம்மு, சம்பா மற்றும் கதுவா (JSK) காவல் செயல் பாட்டு எல்லைகளில் பசுக் கடத்தலைத் தடுப்பதற்காக "காமதேனு நடவடிக்கையை" தொடங்கியுள்ளது.
இந்தியாவில் பொது மருந்துகளைப் பற்றிய விழிப்புணர்வையும், நாடு முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான மக்களுக்கு அவை எவ்வாறு உதவியாக இருக்கும் என்பதையும் ஊக்குவிக்கும் வகையில் மார்ச் 07 ஆம் தேதியன்று ஜன் ஔஷாதி திவாஸ் கொண்டாடப் பட்டது.