TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

March 13 , 2024 128 days 179 0
  • அசாம் மாநிலத்தின் ஜோர்ஹாட் நகரில் அமைக்கப்பட்டுள்ள 'அகோம் பேரரசின் தலைமைப் படைத்தலைவர்' லச்சித் பர்புகானின் 125 அடி வெண்கலச் சிலையைப் பிரதமர் அவர்கள் திறந்து வைத்துள்ளார்.
  • பனாமா நாடானது, சர்வதேச சூரியசக்திக் கூட்டணியை (ISA) அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்து அதன் 97வது உறுப்பினர் நாடாக மாறியுள்ளது.
  • சங்கம்: எண்ணிம இரட்டை முன்னெடுப்பிற்கான இரண்டாவது விழிப்புணர்வு என்ற நிகழ்ச்சி பெங்களூருவில் உள்ள இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் நடத்தப் பட்டது.
  • கர்நாடகாவின் பெங்களூரு நகரில் அமைந்துள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி சபையின் இந்தியத் தோட்டக்கலை கல்வி நிறுவனத்தில் (ICAR-IIHR), ஒரு மாபெரும் "தேசிய தோட்டக்கலை கண்காட்சி – 2024” என்ற நிகழ்வானது ஏற்பாடு செய்யப்பட்டது.
  • ஹரியானாவைச் சேர்ந்த யதின் பாஸ்கர் துகல் 2024 ஆம் ஆண்டு தேசிய இளையோர் பாராளுமன்ற விழாவில் முதல் பரிசை வென்றுள்ளார்.
    • தமிழகத்தைச் சேர்ந்த வைஷ்ணா பிச்சை இரண்டாம் பரிசையும், ராஜஸ்தானை சேர்ந்த கனிஷ்கா சர்மா மூன்றாம் பரிசையும் பெற்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்