TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

March 14 , 2024 127 days 206 0
  • எழுத்தாளர் கண்ணையன் தக்ஷ்ணாமூர்த்தி எழுதிய ‘கருங்குன்றம்’ புத்தகம் ஆனது 2023 ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி மொழிபெயர்ப்பு பரிசிற்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
    • கண்ணையன் தக்ஷ்ணாமூர்த்தி, மாமாங் தாய் என்பவர் எழுதிய ‘The Black Hill’ எனப்படும் ஆங்கில புதினத்தினை தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
  • மனோகர் லால் கட்டார் இராஜினாமா செய்ததையடுத்து ஹரியானா மாநிலத்தின் புதிய முதல்வராக நயாப் சிங் சைனி பதவியேற்றுள்ளார்.
  • இந்தியாவில் உள்ள மத்திய துணை இராணுவப் படைகளுள் இரயில்வே பாதுகாப்புப் படையில் (RPF) அதிகப் பெண் பணியாளர்கள் (9%) உள்ளனர்.
  • மொஹாலியில் உள்ள பிரதான தேசிய வேளாண்-உணவு உயிரித் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் (NABI) முதல்-வகையான "தேசிய பயிர் வளர்ச்சி தூண்டுதல் மையம்" ஆனது தொடங்கப்பட்டது.
  • சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில், முப்பரிமாண அச்சிடல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கட்டமைக்கப்பட்ட உலகின் முதல் மசூதியானது சமீபத்தில் திறக்கப்பட்டது.
  • இந்திய நாடானது, சீனாவிற்கு அடுத்தபடியாக அதிக எண்ணிக்கையில் கைபேசி உற்பத்தி செய்யும் இரண்டாவது நாடாக மாறியுள்ளது.
  • பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பதில் குழாய் அமைப்புப் பணிகள் கொண்டுள்ள முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வைப் பரப்புவதற்காக ஆண்டுதோறும் மார்ச் 11 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் உலக குழாய் அமைப்புப் பணிகள் தினம் கொண்டாடப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்