TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

March 15 , 2024 126 days 189 0
  • இந்தியாவின் முதல் சிறிய அளவிலான திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு உற்பத்தி அலகு ஆனது மத்தியப் பிரதேசத்தில் உள்ள விஜய்ப்பூர் நகரில் திறக்கப்பட்டுள்ளது.
  • குஜராத்தின் பாவ்நகர் அரசு மருத்துவமனையில் பணியமர்த்தப்பட்டுள்ள 23 வயதான கணேஷ் பாரையா, உலகின் மிகக் குள்ளமான மருத்துவர் என்ற பெருமையினைப் பெற்றுள்ளார்.
  • குஜராத்தின் வடோதரா மாநகராட்சிக் கழகம் ஆனது, அங்கீகாரம் பெற்ற ஆசியாவின் முதல் மாநகராட்சிக் கழக பசுமைப் பத்திரத்தை வெளியிட்டதன் மூலம் 1 பில்லியன் ரூபாய் நிதியைத் (12.07 மில்லியன் டாலர்) திரட்டியுள்ளது.
  • சுழிய நிலை கார்பன் உமிழ்வு கொண்ட கட்டிடங்கள் செயல் திட்டத்தை (ZCBAP) தொடங்கியதன் மூலம், நிலையான மேம்பாட்டினை நோக்கி முதல் அடி எடுத்து வைத்துள்ள நாட்டின் முதல் நகரமாக நாக்பூர் மாறியுள்ளது.
  • டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் ஆனது, தொடர்ந்து ஆறாவது ஆண்டாக ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் ‘சிறந்த விமான நிலையம்’ என்ற விருதை பெற்றுள்ளது.
  • கிஷோர் மக்வானா, பட்டியலிடப்பட்ட சாதியினருக்கான தேசிய ஆணையத்தின் (NCSC) தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார்.
    • லவ் குஷ் குமார் பட்டியலிடப்பட்ட சாதியினருக்கான தேசிய ஆணையத்தின் (NCSC) உறுப்பினராக பொறுப்பேற்றுள்ளார்.
  • ஆசிஃப் அலி சர்தாரி, பாகிஸ்தானின் 14வது அதிபராகப் பதவியேற்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்