டாடா மோட்டார்ஸ் குழுமம் ஆனது, ஐந்து ஆண்டுகளில் 9,000 கோடி ரூபாய் முதலீட்டில் வாகனத் தயாரிப்பு மையத்தினை உருவாக்குவதற்காக தமிழ்நாடு அரசுடனான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
பிரதமர் அவர்கள் கோச்ராப் ஆசிரமத்தைத் திறந்து வைத்து, குஜராத்தின் அகமதா பாத் நகரில் காந்தி ஆசிரம நினைவகத்தினை அமைப்பதற்கான ஒரு செயல் திட்டத்தினையும் தொடங்கி வைத்தார்.
மலேசியாவின் பினாங் மாகாணத்தில் நடைபெற்ற 45வது IAA உலக மாநாட்டில் சீனிவாசன் K.சுவாமிக்கு IAA கோடன் காம்பஸ் விருது வழங்கப்பட்டுள்ளது.
மாருதி சுசுகி நிறுவனத்தின் இந்தியாவிலேயே முதல் வகையான வாகன உற்பத்தி ஆலைக்குள்ளேயே அமைக்கப்பட்ட இரயில்வே வழித்தடத் திட்டம் ஆனது குஜராத் மாநிலத்தின் ஹன்சல்பூர் நகரில் தொடங்கப்பட்டுள்ளது.
இந்தியக் கடலோரக் காவல்படை மற்றும் அமெரிக்கக் கடலோரக் காவல்படை ஆகியவை இடையே மேற்கொள்ளப்படும் ‘சீ டிஃபென்டர்ஸ்-2024’ எனப்படும் விரிவான கடல்சார் பாதுகாப்புப் பயிற்சியானது அந்தமானின் போர்ட் பிளேயரில் மிகவும் வெற்றிகரமாக நிறைவு அடைந்தது.
மகாராஷ்டிராவில் முதன்முறையாக, வொர்லி கோலிவாடா அருகே அரபிக்கடலில் 210 செயற்கை பவளப்பாறைகள் மும்பையில் நிறுவப்பட உள்ளன.
பாண்டிச்சேரிக்கு அடுத்தபடியாக நாட்டில் செயற்கையானப் பவளப்பாறைகள் அமைக்கப் படுவது இதுவே இரண்டாவது முறையாகும்.