இரண்டாவது உலகத் தமிழ் செம்மொழி மாநாடு ஆனது, 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் சென்னையில் ஐந்து நாட்கள் வரை நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
முதல் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு ஆனது 2010 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் கோயம்பத்தூரில் நடைபெற்றது.
நடைபெற உள்ள 18வது மக்களவைத் தேர்தல் மற்றும் ஆந்திரப் பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம், ஒடிசா மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களின் சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் அட்டவணையை இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவித்தார்.
2024 ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் ஆனது ஏப்ரல் 19 முதல் ஜூன் 01 வரையிலான தேதிகளில் ஏழு கட்டங்களாக நடைபெறும்.
டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவரான ரத்தன் டாடாவிற்கு, அவரது சிறந்த மனிதாபிமான (புரவலர்) பங்களிப்புகளுக்காக மதிப்புமிக்க P.V. நரசிம்ம ராவ் நினைவு விருது வழங்கப்பட்ட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டின் சிறந்த பெண் ஊடகவியலாளருக்கான சமேலி தேவி ஜெயின் விருது ஆனது தனிச் சுதந்திரம் கொண்ட (எந்தவித வெளித் தாக்கமும் இல்லாத) பத்திரிகையாளர் கிரீஷ்மா குதர் மற்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழின் ரித்திகா சோப்ரா ஆகியோருக்கு கூட்டாக வழங்கப் பட்டுள்ளது.
மகாராஷ்டிரா அரசானது, 18 ஆம் நூற்றாண்டின் மராத்திய இராணி அஹில்யாபாய் ஹோல்கரின் நினைவாக அகமதுநகர் மாவட்டத்தின் பெயரை 'அஹில்யா நகர்' என மறுபெயரிட முடிவு செய்துள்ளது.
ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 17 ஆம் தேதியை 'ஐதராபாத் விடுதலை நாளாக' கொண்டாட உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
1948 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 ஆம் தேதியன்று மேற்கொள்ளப்பட்ட 'போலோ நடவடிக்கை' என்ற காவல் துறை நடவடிக்கைக்குப் பிறகு இந்தப் பகுதி நிஜாமின் ஆட்சியிலிருந்து விடுதலை பெற்றது.