TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

March 24 , 2024 117 days 137 0
  • மேம்பாட்டு வங்கியான இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியானது, அவானா நிலைத்தன்மை நிதி (ASF) எனப்படும் 120 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான அதன் முதல் தொகுப்பு நிதித் திட்டத்திற்கு என்று பசுமை பருவநிலை நிதியத்தின் அனுமதியைப் பெற்றுள்ளது.
  • ‘சோமா: தி ஆயுர்வேத கிச்சன்’ எனப்படுகின்ற இந்தியாவின் முதல் ஆயுர்வேத சிற்றுண்டியகம் ஆனது, டெல்லி மகரிஷி ஆயுர்வேத மருத்துவமனையில் திறக்கப் பட்டுள்ளது.
  • நேபாளப் பிரதமர் பிரசந்தா அவர்கள், பொக்காரா நகரினை "நேபாளத்தின் சுற்றுலாத் தலைநகராக" அறிவித்துள்ளார்.
  • மெட்டா நிறுவனமானது, வரவிருக்கும் மக்களவைத் தேர்தலின் போது அதன் இணைய தளங்களில் பரவும் தவறான பொய்த் தகவல்களைக் கட்டுப்படுத்தவும், வாக்காளர் குறுக்கீடுகளை அகற்றவும், வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை நன்கு அதிகரிக்கவும் ஒரு 'விரிவான அணுகுமுறையை' அறிமுகப்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்