28வது பங்குதாரர் மாநாட்டின் (2023 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் பருவ நிலை மாற்ற மாநாடு) தலைவர் ஐக்கிய அரபு அமீரகத்தின் டாக்டர் சுல்தான் அல் ஜாபர், CERAWeek தலைமைத்துவ விருதைப் பெற்றுள்ளார்.
3வது வடகிழக்கு விளையாட்டுப் போட்டிகளானது (2024) நாகாலாந்தின் சோவிமா நகரில் தொடங்கியது.
இந்திய மின்கட்டமைப்பு கட்டுப்பாட்டுக் கழக லிமிடெட் (GRID-INDIA) நிறுவனமானது, மினிரத்னா-I வகையிலான மத்திய பொதுத்துறை நிறுவனம் என்ற அந்தஸ்தினைப் பெற்றதன் மூலம் குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது.
திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு மூலம் இயங்கும் இந்தியாவின் முதல் பேருந்து ஆனது மகாராஷ்டிரா மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்தினால் அறிமுகப் படுத்தப் பட்டு இயக்கப்பட்டது.