TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

March 27 , 2024 242 days 242 0
  • ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) நான்காவது புத்தொழில் மன்றமானது புது டெல்லியில் நடத்தப் பட்டது.
  • குட்எனஃப் எனர்ஜி நிறுவனமானது, ஜம்மு காஷ்மீரில் இந்தியாவின் முதலாவது மாபெரும் மின்கல ஆற்றல் சேமிப்பு கல உற்பத்தி ஆலையினை (ஜிகாஃபாக்டரி) துவக்கும் திட்டத்தினை அறிவித்துள்ளது.
    • இந்த ஆலையானது, ஆண்டுதோறும் 5 மில்லியன் டன் கார்பன் உமிழ்வைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தியா, மொசாம்பிக் மற்றும் தான்சானியா நாடுகளின் கடற்படைகள் ஆனது, IMT TRILAT 2024 எனப்படுகின்ற இரண்டாவது முத்தரப்பு (TRILAT) கடல்சார் பயிற்சியில பங்கேற்கின்றன.
  • வரவிருக்கும் 2024 ஆம் ஆண்டு பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்திய டேபிள் டென்னிஸ் வீரர் ஷரத் கமல் தேசியக் கொடியை ஏந்தி இந்திய அணியை வழிநடத்தும் வீரராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
    • ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற M.C. மேரி கோம் கோடைக்கால விளையாட்டுப் போட்டிகளுக்கான இந்திய அணியின் தலைமைப் பொறுப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியம் (ITU) ஆனது, தனது எண்ணிமப் புத்தாக்க வாரியத்தின் இணைத் தலைமை பொறுப்பிற்கு இந்திய நாட்டினைத் தேர்ந்தெடுத்து உள்ளது.
    • தொலைத்தொடர்பு துறை செயலாளர், டாக்டர் நீரஜ் மிட்டல், சர்வதேச தொலைத் தொடர்பு ஒன்றியத்தின் எண்ணிம புத்தாக்க வாரியத்தின் இணைத் தலைவராக ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், 'ஆர்டர் ஆஃப் தி ட்ருக் கியால்போ' என்ற பூடான் நாட்டின் உயரியக் குடிமை விருதினைப் பெற்றுள்ளார்.
    • இந்தக் கௌரவத்தைப் பெறும் முதல் வெளிநாட்டு அரசாங்கத் தலைவர் இவர் ஆவார்.
  • குழந்தைகள் மற்றும் இளையோர்களுக்கான நாடகக் கலை மீது பரந்த அளவில் பொதுமக்களின் கவனத்தை நன்கு ஈர்க்கச் செய்யும் வகையில், குழந்தைகள் மற்றும் இளையோர்களுக்கான உலக நாடக தினம் ஆனது ஆண்டுதோறும் மார்ச் 20 ஆம் தேதியன்று கொண்டாடப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்