NLC இந்தியா லிமிடெட் (NLCIL) நிறுவனமானது, சமீபத்தில் புது டெல்லியில் நடைபெற்ற 2024 ஆம் ஆண்டு உலகத் தூய்மை ஆற்றல் உச்சி மாநாட்டின் போது, சுரங்கப் பிரிவில் 2024 ஆம் ஆண்டு GEEF உலக சுற்றுச்சூழல் விருதினைப் பெற்றுள்ளது.
சமூக மற்றும் சுற்றுச்சூழல் ஏற்றத்தாழ்வுகள் களத்தில் ஆற்றிய மிகவும் அற்புதமான பணிக்காக பினா அர்கவால் மற்றும் ஜேம்ஸ் K. பாய்ஸ் ஆகியோருக்கு முதலாவது "உலகச் சமத்துவமின்மை ஆராய்ச்சி விருது" ஆனது வழங்கப்பட்டுள்ளது.
நாசா நிறுவனமானது, முப்பரிமாண முறையில் அச்சிடப்பட்ட ஒரு இயந்திரத்தை (என்ஜின்) சமீபத்தில் வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது.
இந்தப் புதுமையான உந்துவிசை அமைப்பு ஆனது, சுழலும் வகையிலான வெடிப்பு முறையில் தூண்டுவிக்கப்படும் எந்திரம் (RDRE) என்று அழைக்கப்படுகிறது.
ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 22 ஆம் தேதியன்று, பீகார் மாநிலத்தில் அம்மாநிலத்தின் உருவாக்க தினத்தினை நினைவு கூரும் வகையில் பீகார் திவாஸ் தினம் கொண்டாடப் படுகிறது.
1912 ஆம் ஆண்டில் பீகார் மற்றும் ஒரிசா ஆகியவை வங்காளத்தில் இருந்து தனி மாநிலங்களாகப் பிரிந்தன.