TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

March 29 , 2024 240 days 311 0
  • ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 24 ஆம் தேதியன்று, ஒட்டுமொத்த மனித உரிமை மீறல்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் தன்மதிப்பு தொடர்பான உண்மையறியும் உரிமைக்கான சர்வதேச தினம் ஆனது கொண்டாடப்படுகிறது.
    • இந்த வருடாந்திர அனுசரிப்பு ஆனது, 1980 ஆம் ஆண்டு மார்ச் 24 ஆம் தேதியன்று படுகொலை செய்யப்பட்ட மான்சிக்னர் ஆஸ்கார் அர்னுல்ஃபோ ரோமெரோ அவர்களின் நினைவாக மேற்கொள்ளப்படுகிறது.
  • கைது செய்யப்பட்ட மற்றும் காணாமல் போன ஐநா பணியாளர்களுக்கான சர்வதேச ஒன்றிணைவு தினமானது ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 25 ஆம் தேதியன்று அனுசரிக்கப் படுகிறது.
    • இந்தத் தினமானது, 1985 ஆம் ஆண்டில் பாலஸ்தீனிய அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் நிவாரண மற்றும் பணி முகமையில் (UNRWA) பணியாற்றிய முன்னாள் பத்திரிகையாளர் அலெக் கோலெட் கடத்தப்பட்டதை நினைவு கூரும் விதமாக ஒவ்வோர் ஆண்டும் அனுசரிக்கப்படுகிறது.
  • கருவில் உள்ள சிசுவின் நினைவாக ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 25 ஆம் தேதியன்று கருவில் உள்ள சிசுக்களுக்கான சர்வதேச தினம் அனுசரிக்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்