TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

March 30 , 2024 239 days 216 0
  • தேர்தல் ஆணையம் ஆனது, மாற்றுத் திறனாளிகள் எளிதாக வாக்களிக்கவும் வாக்குச் சாவடிகளில் இதர வசதிகளைப் பெறுவதற்கும் வழிவகை செய்யும் வகையில் சாக்சம் என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • உச்ச நீதிமன்றமானது, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களை ஊக்குவிப்பதற்கான நாட்டின் சர்வதேச உறுதிப்பாடுகளுடன், அருகி வரும் கானமயில் பறவை இனத்தின் வளங்காப்பு மற்றும் பாதுகாப்பினைச் சமநிலைப்படுத்துவதற்காக என்று ஒரு நிபுணர் குழுவினை அமைத்துள்ளது.
    • குஜராத் மற்றும் ராஜஸ்தானில் உள்ள அவற்றின் முக்கிய வாழ்விடங்களை ஒட்டி அமைந்துள்ள மிக உயர் ஆற்றல் கொண்ட மின் கம்பி வடங்களில் அடிக்கடி சிக்கி அவை உயிரிழக்கின்றன.
  • குஜராத் கூட்டுறவுப் பால் சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு (GCMMF) ஆனது, நான்கு வகையான பால்களை அமெரிக்கச் சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
    • இந்திய நாட்டிற்கு வெளியே வேறொரு நாட்டில் அமுல் வகை தூய பால் கிடைப்பது இதுவே முதல் முறையாகும்.
  • டி20 கிரிக்கெட் போட்டிகளில் 12,000 ரன்களை எட்டிய முதல் இந்திய வீரர் என்ற ஒரு பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார்.
  • உலக பியானோ தினமானது ஆண்டின் 88வது நாளில் (மார்ச் 28) அனுசரிக்கப் படுகிற நிலையில் இது "இசைக்கருவிகளின் ராஜாவாக" கருதப்படும் பியானோ கருவியைக் கொண்டாடுகின்ற உலகெங்கிலும் உள்ள பியானோ பிரியர்களை ஒன்றிணைக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்