இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் ஆனது உலகின் வலுவான காப்பீட்டு நிறுவனமாக உருவெடுத்துள்ளது.
அதனைத் தொடர்ந்து தைவான்நாட்டில் அமைந்துள்ள NRMA காப்பீட்டு நிறுவனம், ஆஸ்திரேலிய நாட்டில் அமைந்துள்ள கேத்தே என்ற ஆயுள் காப்பீட்டு நிறுவனம் ஆகியவை இடம் பெற்றுள்ளன.
சிங்கப்பூர் நாட்டின் "டாலி" என்ற கொள்கலன் (சரக்கு) கப்பல் ஆனது அமெரிக்காவின் பால்டிமோர் நகரில் அமைந்துள்ள பிரான்சிஸ் ஸ்காட் கே பாலத்தின் தூண்களுள் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளானது.
இராமகிருஷ்ணா இயக்கத்தின் தலைவர் சுவாமி ஸ்மரனாநந்தா சமீபத்தில் காலம் ஆனார்.
அவர் 2017 ஆம் ஆண்டில் அவ்வியக்கத்தின் 16வது தலைவராகப்பொறுப்பேற்றார்.
சர்வதேச திருநர்கள் குறித்த தெளிவான பார்வை என்ற தினமானது (Trans Day of Visibility) ஆண்டுதோறும் மார்ச் 31 ஆம் தேதியன்று, திருநர்களைக் கொண்டாடுவதற்காகவும், உலகளவில் உள்ள திருநர்கள் எதிர்கொள்ளும் பாகுபாடுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் வேண்டி அனுசரிக்கப்படுகிறது.