TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

April 3 , 2024 107 days 181 0
  • 2024 ஆம் ஆண்டிற்கான ரொமைன் ரோலண்ட் புத்தகப் பரிசானது பங்கஜ் குமார் சாட்டர்ஜியின் 'ஸ்டாலினர் திவான்' என்ற வங்காள மொழிபெயர்ப்பு நூலிற்கு வழங்கப் பட்டுள்ளது.
  • மின் மற்றும் மின்னணு பொறியாளர்கள் அமைப்பின் (IEEE) கேரளா பிரிவானது, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) தலைவரான S. சோமநாத் அவர்களுக்கு 2024 ஆம் ஆண்டிற்கான K.P.P. நம்பியார் விருது வழங்கி கௌரவித்து உள்ளது.
  • சுனில் பார்தி மிட்டல் பிரிட்டன் நாட்டு மன்னர் கையால் கெளரவ வீரத் திருமகன் பட்டத்தினைப் பெற்ற முதல் இந்திய குடிமகன் என்ற பெருமையினைப் பெற்றுள்ளார்.
  • அதானி குழுமம் ஆனது, சமீபத்தில் உத்தரப் பிரதேச மாநிலத்தின் கான்பூர் நகரில் 500 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள தெற்காசியாவின் மிகப்பெரிய வெடிமருந்து மற்றும் ஆயுத ஏவுகணை வளாகத்தினைச் சமீபத்தில் திறந்து வைத்துள்ளது.
  • BioAsia எனப்படும் ஆசியாவின் முதன்மையான உயிரித் தொழில்நுட்பம் மற்றும் உயிர் அறிவியல் மாநாடானது (21வது) ஹைதராபாத் மாநிலத்தில் நடைபெற்றது.
    • நடப்பு ஆண்டு உச்சி மாநாட்டின் கருத்துரு, "தரவு மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றினைக் கொண்டு உயிர் அறிவியலை மாற்றியமைத்தல்" என்பதாகும்.
  • க்ருத்ரிம் என்ற ஒரு செயற்கை நுண்ணறிவு (AI) புத்தொழில் நிறுவனமானது, அதன் beta version AI (பகுதியளவு நிறைவு செய்யப்பட்ட சோதனை பயன்பாட்டிற்கான) உரையாடு மென்பொருளினை அறிமுகப்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்