கமல் கிஷோர் (55) பேரிடர் அபாயக் குறைப்புப் பிரிவின் உதவித் தலைமைச் செயலாளராகவும், அப்பிரிவின் தலைமைச் செயலாளரின் சிறப்புப் பிரதிநிதியாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
மத்திய அரசானது, ‘அனுவாதினி’ செயலி எனப்படுகின்ற ஒரு செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான தளத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.
அனைத்துப் பள்ளி மற்றும் உயர்கல்வி படிப்புகளுக்கான ஆய்வுக் கட்டுரைகளை எண்ணிம வடிவத்தில், குறிப்பாக இந்திய அரசியலமைப்பின் 8வது அட்டவணையில் பட்டியலிடப் பட்டுள்ள இந்திய மொழிகளில் கிடைக்கப் பெறச் செய்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.