கத்தியா கெஹு (கோதுமை) என்று பிரபலமாக அறியப்படும் உத்தரப் பிரதேசத்தில் உள்ள புந்தேல்கண்ட் பகுதியின் உள்நாட்டுப் பண்ணை உற்பத்தி வகை கோதுமைக்கு மதிப்பு மிக்க புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) பாதுகாப்புச் சபையின் செயலாளர்களின் 19வது கூட்டம் ஆனது கஜகஸ்தானின் ஆஸ்தானா நகரில் நடைபெற்றது.
நியூயார்க் நகரில் அமைந்துள்ள ஹியூம் நிறுவனம் ஆனது, ‘மனவெழுச்சி நுண்ணறிவுடன் கூடிய முதல் உரையாடும் வகையிலான செயற்கை நுண்ணறிவினை’ அறிமுகப்படுத்தியுள்ளது.
மின்சக்தி அமைச்சகத்தின் கீழ் உள்ள REC லிமிடெட் நிறுவனம் ஆனது, 'புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு நிதியளித்தல்' பிரிவில் 2024 ஆம் ஆண்டிற்கான SKOCH ESG விருதை வென்று உள்ளது.
டாக்டர் கார்த்திக் கொம்முரி பற்சீரமைப்பியல் மற்றும் தாடை வலி ஆகிய பிரிவுகளில் நிபுணத்துவம் பெற்ற புகழ்பெற்ற வெளிநாடுவாழ் பல்மருத்துவ நிபுணர் எனும் மதிப்பு மிக்க தேசியப் புகழ் விருதை பெற்றுள்ளார்.
சர்வதேச எரிசக்தி முகமை (IAEA) மற்றும் பெல்ஜியம் அரசு ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்த முதல் அணுசக்தி உச்சி மாநாடானது பிரஸ்ஸல்ஸ் என்ற நகரில் நடத்தப் பட்டது.