சித்திரகூட்டில் உள்ள துளசி (ஷபரி) நீர்வீழ்ச்சியில் அமைக்கப்பட்டுள்ள உத்தரப் பிரதேசத்தின் முதல் கண்ணாடியினாலான நடைமேம்பாலம் விரைவில் திறக்கப்பட உள்ளது.
பேராசிரியர் ராமன் மிட்டல் மற்றும் பேராசிரியை சீமா சிங் ஆகியோர் “Law and Spirituality: Reconnecting the Bond” என்ற புத்தகத்தினைத் தொகுத்துள்ளனர்.
இந்திய ரிசர்வ் வங்கியானது, வெளிநாட்டுச் சந்தைகளில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்திற்கு எதிராக இந்தியர்கள் தங்கள் இழப்புக் காப்பு முதலீட்டு (ஹெட்ஜிங்) உத்திகளைப் பன்முகப்படுத்த உதவும் வகையில் ஒரு குறிப்பிடத் தக்க கொள்கை திருத்தத்தை அறிமுகப்படுத்தியது.
அமிதாப் பச்சனுக்கு 2024 ஆம் ஆண்டிற்கான லதா தீனாநாத் மங்கேஷ்கர் விருது வழங்கப் பட்டுள்ளது.
இஸ்ரோ நிறுவனமானது, ஏவுகல இயந்திரங்களுக்கான இலகுரக கார்பன்-கார்பன் (C-C) குழல் முனையை உருவாக்கியுள்ளது என்ற நிலையில் இது ஏவுகல இயந்திர தொழில் நுட்பத்தில் ஒரு திருப்புமுனை மிக்க கண்டுபிடிப்பு என்று கூறப்படுகிறது.
இமாச்சலப் பிரதேச கிரிக்கெட் சங்க (HPCA) மைதானம் ஆனது, அதிநவீன 'கலப்பு வகை ஆடுகளத்தினை' அமைக்க BCCI அமைப்பால் அனுமதியளிக்கப்பட்ட முதல் மைதானமாக மாறியுள்ளது.
இருபது ஆண்டுகளாக தலைமைப் பொறுப்பில் இருந்த சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங், மே 15 ஆம் தேதியன்று பதவி விலகுவதையடுத்து, அவரது பிரதிநிதி லாரன்ஸ் வோங்கிடம் அவர் அதிகாரத்தை ஒப்படைக்க உள்ளார்.
நடிகைக்குப் பணப்பட்டுவாடா செய்த வழக்கில் குற்றவியல் விசாரணையை எதிர் கொள்ளும் முதல் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆவார்.
மனிதர்களின் குரல் மற்றும் குரல் ஒலி ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 16 ஆம் தேதியன்று உலக குரல் தினம் கொண்டாடப் படுகிறது.