சானி இந்தியா நிறுவனமானது, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட உள்ள முழுவதும் மின்சாரத்தில் இயங்கக்கூடிய SKT105E என்ற முதல் சரக்குந்தினை அறிமுகப்படுத்தி உள்ளது.
உலகப் பொருளாதார மன்றம் ஆனது நைக்கா (Nykaa) நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் நைக்கா ஃபேஷன் தலைமை நிர்வாக அதிகாரி அத்வைதா நாயரை ‘2024 ஆம் ஆண்டின் உலகளாவிய இளம் தலைவர்’ என்று குறிப்பிட்டுள்ளது.
கேரள மாநிலத்தின் சுகாதாரத் துறையானது, பெருந்தொற்று குறித்த ஆய்வு மற்றும் குறைந்தபட்சமாக எட்டு நோய்களைக் கட்டுப்படுத்துதல் ஆகியவற்றிற்கான பல்வேறு விரிவான நியம நடவடிக்கை முறைமைகளை (SOP) விரைவில் வெளியிட உள்ளது.
கடல் வாழ் உயிரினங்களுக்கானச் சூழலை மேம்படுத்துவதற்காக என்று இந்தியாவின் இரண்டாவது (பாண்டிச்சேரிக்கு அடுத்தபடியாக) செயற்கைப் பவளப் பாறைகள் என்பது, மும்பையின் வொர்லி கோலிவாடா அருகே நிறுவப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவினால் உருவாக்கப்பட்ட 2 நடுவர்கள் அங்கத்துவம் வகிக்கும் நடுவர் குழுவினைக் கொண்ட உலகின் முதல் 'செயற்கை நுண்ணறிவுகளின் அழகி' என்ற அழகுப் போட்டியானது அறிவிக்கப்பட்டது.
அஜய் பங்கா, ஆலியா பட் மற்றும் சாக்சி மாலிக் உள்ளிட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 8 பேர், டைம் இதழின் 2024 ஆம் ஆண்டின் மிகவும் செல்வாக்கு மிக்க 100 நபர்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
அராபிகா காபி இனத்தின் மரபணு ஆனது, எத்தியோப்பியாவின் காடுகளில் 610,000 முதல் ஒரு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னதாக மதிப்பிடப்பட்ட இரண்டு காபி பயிர் இனங்களுக்கிடையிலான இயற்கையான இனச்சேர்க்கையின் காரணமாக தோன்றி உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
இது சுமார் 300,000 ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவில் தோன்றிய ஹோமோ சேபியன்ஸ் இனத்தை விட இந்த இனம் பழமையானது என்பதைக் குறிக்கிறது.
சென்னையின் இந்தியத் தொழில்நுட்பக் கழகம் ஆனது, "நடமாடும் வாகனங்களில்" இந்தியாவின் முதல் மருத்துவச் சாதனங்களின் அளவுத் திருத்த வசதியை அறிமுகப் படுத்தியுள்ளது.
இந்த வசதியானது, இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் அனைவருக்கும் IITM என்ற முன்னெடுப்பின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது.
42வது நிறுவனங்களுக்கு இடையேயான விண்வெளிக் குப்பைகள் மேலாண்மை ஒருங்கிணைப்புக் குழுவின் (IADC) வருடாந்திரக் கூட்டமானது பெங்களூருவில் நடத்தப் பட்டது.
இந்த முன்னெடுப்பானது, 2030 ஆம் ஆண்டிற்குள் அனைத்து இந்திய விண்வெளி நிறுவனங்கள், அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களால் குப்பைகள் இல்லாத விண்வெளித் திட்டங்களை அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன்பு, சீன எழுத்துக்களைக் கண்டுபிடித்தவராகக் கருதப் படும் காங்ஜி என்ற புராண கதாப்பாத்திரத்திற்கு கௌரவமளிக்கும் விதமாக என்று ஆண்டுதோறும் ஏப்ரல் 20 ஆம் தேதியன்று ஐக்கிய நாடுகள் சபையின் சீன மொழி தினம் அனுசரிக்கப்படுகிறது.
உலகளாவியப் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் படைப்பாற்றல் மற்றும் புதுமையின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 21 ஆம் தேதியன்று உலக படைப்பாற்றல் மற்றும் புதுமை தினம் அனுசரிக்கப் படுகிறது.