இந்தியா 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஆர்க்டிக் பகுதிக்கான தனது முதல் குளிர்கால ஆய்வுப் பயணத்தினை நிறைவு செய்த நிகழ்வானது, அதன் ஆர்க்டிக் ஆய்வு முயற்சிகளில் குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது.
கடற்படை துணைத் தளபதி தினேஷ் குமார் திரிபாதி அடுத்த கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பானது, "உள்நாட்டிலேயே உருவாக்கப் பட்ட நீண்ட தூர வரம்புடைய குறையொலி சீர்வேக எறிகணையின்" ஏவுதல் சோதனையை வெற்றிகரமாக மேற்கொண்டது.
குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரைச் சேர்ந்த ஆறு வயது சிறுமி தக்ஷ்வி வகானி 25 மீட்டர் தூரம் குறைந்த உயரத்தில் (16.5 செ.மீ.) லிம்போ ஸ்கேட்டிங் செய்து (கிடை மட்ட அளவிலான) கின்னஸ் உலக சாதனையினைப் படைத்துள்ளார்.
எதிர்காலத்தில் செவ்வாய்க் கிரகத்திற்கு ஒரு விண்கலத்தைச் சுமந்துச் செல்லக்கூடிய சுழலும் வகையிலான வெடிப்பு முறையில் தூண்டுவிக்கப்படும் எந்திரம் (RDRE) எனப் படும் புதிய வகை ஏவு கல இயந்திரத்தை நாசா வெற்றிகரமாகப் பரிசோதித்துள்ளது.
சூடான் மற்றும் அண்டை நாடுகளுக்கான சர்வதேச மனிதாபிமான மாநாடு ஆனது பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் நடைபெற்றது.