TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

April 25 , 2024 213 days 250 0
  • 17 வயதான D குகேஷ், கேண்டிடேட்ஸ் (சாம்பியன் போட்டியில் பங்கேற்பதற்கான தேர்வு நிலை) சதுரங்கப் போட்டியில் வெற்றி பெற்று, இந்த உலகப் பட்டத்தை வென்ற இளம் வயது வீரராக வரலாறு படைத்துள்ளார்.
  • அனந்த் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் நிறுவனர் பவுலூரி சுப்பா ராவிற்கு இந்திய வானூர்தி அறிவியல் சமூகத்தின் (ASI) ‘ஆர்யபட்டா விருது’ வழங்கப்பட்டுள்ளது.
    • "இந்தியாவில் விண்வெளி அறிவியலை மேம்படுத்துவதில் ராவ் ஆற்றிய மகத்தான வாழ்நாள் அளவிலானப் பங்களிப்பு" என்ற விருது அங்கீகாரத்தைப் பெற்றார்.
  • மெட்டா நிறுவனமானது அதன் மிகவும் திறன் மிக்க Meta Llama 3 எனப்படும் பெரிய மொழி மாதிரியினை (LLM) அறிமுகப்படுத்தியுள்ளது.
  • நேபாள நாடானது, LGBT சமூகத்தினைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கான பாதுகாப்பான மற்றும் உள்ளடக்கிய இடமாக தனது நாட்டை மேம்படுத்துவதற்காக தனது முதல் சர்வதேச ரெயின்போ (பல் சமூக) சுற்றுலா மாநாட்டை காத்மண்டு நகரில் நடத்தியது.
  • ஏப்ரல் 24 ஆம் தேதியானது உலக அளவில் பலதரப்பு மற்றும் அமைதிக்கான அரசு முறை தினமாக அனுசரிக்கப்படுகிறது.
  • ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்பினராக உள்ள நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் பேராளர்களின் பங்கு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஏப்ரல் 25 ஆம் தேதியன்று சர்வதேசப் பிரதிநிதிகள் தினம் உலகளவில் அனுசரிக்கப்பட்டது.
    • 1945 ஆம் ஆண்டு ஏப்ரல் 25 ஆம் தேதியன்று, ஐம்பது நாடுகளின் பிரதிநிதிகள் முதன்முறையாக சான் பிரான்சிஸ்கோ நகரில் ஒன்று கூடினர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்