"இந்திய உளவியலின் தந்தை" எனப்படும் சுதிர் காக்கர் சமீபத்தில் காலமானார்.
26வது உலக எரிசக்தி மாநாடானது நெதர்லாந்தின் ரோட்டர்டாம் நகரில் நடத்தப் பட்டது.
பத்து பலதரப்பு மேம்பாட்டு வங்கிகளின் (MDBs) கூட்டணியானது, மேம்பாட்டின் நிலை மற்றும் தாக்கத்திற்கு கூடுதல் மூலதனத்தை வழங்குவதற்காக வேண்டி "உலக ஒத்துழைப்பிலான இணை நிதியுதவி" என்ற புதிய இணை-நிதியளிப்புத் தளத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.
நடிகர் ரன்தீப் ஹூடா இந்தியத் திரைத்துறைக்கு ஆற்றியப் பெரும் பங்களிப்பினைப் பாராட்டி லதா தீனாநாத் மங்கேஷ்கர் விருது வழங்கப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டு ASEAN எதிர்கால மன்றத்தின் (AFF 2024) இரண்டாவது முழு நிறைவான அமர்வானது வியட்நாமின் ஹனோய் நகரில் நடைபெற்றது.
மக்களை மையமாகக் கொண்ட ASEAN சமூகத்திற்கு விரிவான ஒரு பாதுகாப்பு வழங்குவதை உறுதி செய்வதற்கான வழிகள் பற்றி இந்த மன்றத்தில் விவாதிக்கப் பட்டது.
நடனக் கலையினை உலகளாவிய மதிப்பு கொண்டதாக மேம்படுத்துவதற்காக என்று ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 29 ஆம் தேதியன்று சர்வதேச நடன தினம் கொண்டாடப் படுகிறது.