அமெரிக்கத் தொழில்துறை தானியக்க மற்றும் எண்ணிமப் பரிமாற்றத் தொழில் நுட்ப நிறுவனமான ராக்வெல் ஆட்டோமேஷன், சென்னையில் தனது புதிய உற்பத்தி நிலையத்தைத் திறக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையானது சமீபத்தில் "ஆற்றல் மாற்றத்திற்கான முக்கிய தாதுக்கள்" என்ற புதிய பிரிவினை அறிமுகப் படுத்தியுள்ளது.
இது "பொருள்-ஆற்றல் ஒன்றிணைப்பின்" சவால்களை எதிர்கொள்வதையும், பொறுப்பு மிக்க மற்றும் நியாயமான மதிப்புச் சங்கிலி அமைப்புகளை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஐரோப்பிய மருத்துவ நுண்ணுயிரியல் மற்றும் தொற்று நோய்கள் சங்கம் (ESCMID) மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு மீதான உலகளாவியத் தலைமைத்துவக் குழு (GLG) ஆகியவை இணைந்து ‘அறிவியல் மற்றும் கொள்கைகள் ஆகியவற்றுக்கு இடையே உள்ள கூட்டாண்மைகளை உருவாக்குதல்’ என்ற உயர்மட்ட நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்தன.
நுண்ணுயிர் எதிர்ப்பு (AMR) பற்றிய ஆராய்ச்சி, அறிவியல் மற்றும் செயல் படுத்துதலை அரசியல் சார்ந்த செயல்பாட்டு நிரலில் சேர்ப்பதை இது முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.